search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜனநாயகத்தை நெறித்த கறைகளை காங்கிரஸ் கட்சியால் கழுவ முடியாது- பிரதமர் மோடி
    X

    ஜனநாயகத்தை நெறித்த கறைகளை காங்கிரஸ் கட்சியால் கழுவ முடியாது- பிரதமர் மோடி

    • அரசியல் சட்டம் இல்லை என்றால் என்னை போன்றவர்கள் எல்லாம் இந்த அவைக்கு வந்திருக்க முடியாது.
    • அரசியல் சாசனத்தை அவமதிப்பதற்கான எந்த வாய்ப்புகளையும் காங்கிரஸ் விட்டு வைக்கவில்லை.

    மக்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    விடுதலைக்கு பிறகும் சில இந்தியர்கள் அடிமை மனநிலையிலேயே சிக்கி உள்ளனர்.

    கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் ஒற்றுமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இந்தியா, ஒரே நாடு என்பதை வலியுறுத்த தான் 370 சட்ட பிரிவு ரத்து செய்யப்பட்டது. நாட்டின் பொருளாதார ஒற்றுமைக்காகவே ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது.

    ஒரே நாடு ஒரே வரி என்பது நமது பொருளாதாரத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறது. ஏழைகள் மற்றொரு மாநிலத்திற்கு செல்லும்போது, உணவு தானியம் கிடைப்பதற்காக ஒரேநாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் கொண்டுவரப்பட்டது.

    ஏழைகள் இலவச சிகிச்சை பெறுவதற்காக, ஒரே நாடு ஒரே சுகாதார என்ற திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் பாரத் கொண்டு வரப்பட்டது.

    ஒரே நாடு ஒரே மின் வழித்தட திட்டத்தால் நாடு முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது.

    புதிய தேசிய கல்வி கொள்கையால் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை மாநில மொழிகளில் படிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.

    ஒரே நாடு ஒற்றுமையை வலியுறுத்த காசி தமிழ் சங்கம் நிழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    நாட்டில் எமர்ஜென்சி கொண்டு வந்து அரசியல் சாசனத்திற்கு முடிவுரை எழுதப்பட்டது. எமர்ஜென்சியின்போது ஊடக சுதந்திரமும் நசுக்கப்பட்டது.

    அரசியலமைப்பின் 25வது ஆண்டின்போது காங்கிரஸ் ஆட்சியில் தான் அந்த எமர்ஜென்சி கொண்டுவரப்பட்டது. ஜனநாயகத்தை நெறித்த கறைகளை காங்கிரஸ் கட்சியால் கழுவ முடியாது.

    நவம்பர் 26ம் தேதி இந்திய அரசியல் சாசன தினமாக கொண்டாடப்படும் என அறிவித்தபோது ஒரு காங்கிரஸ் தலைவர் என்ன அவசியம் என கேட்டார்.

    அரசியல் சட்டம் இல்லை என்றால் என்னை போன்றவர்கள் எல்லாம் இந்த அவைக்கு வந்திருக்க முடியாது.

    எங்களை தொடர்ந்து 3 முறை மக்கள் தேர்வு அனுப்பி வைத்துள்ளனர். நாட்டு மக்கள் முழு வலிமையுடன் அரசியல் சாசனத்துடன் நிற்கிறார்கள்.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் மட்டுமே 50 ஆண்டுகளாக ஆட்சி செய்தனர். ஒரே ஒரு காங்கிரஸ் குடும்பம் தான் இந்திய அரசியல் சாசனத்தை அதிகமாக காயப்படுத்தியது.

    1947 முதல் 1952 வரை நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லை. அரசியல் சாசனத்தை அவமதிப்பதற்கான எந்த வாய்ப்புகளையும் காங்கிரஸ் விட்டு வைக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×