என் மலர்
இந்தியா
X
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
டெல்லி சட்டசபை தேர்தல்: குடும்பத்திற்கு ரூ.25 லட்ச மருத்துவ காப்பீடு- காங்கிரஸ் வாக்குறுதி
Byமாலை மலர்8 Jan 2025 4:47 PM IST (Updated: 8 Jan 2025 5:58 PM IST)
- டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக தனித்தனியாக போட்டியிடுகின்றன.
- டெல்லியில் ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் ஜீவன் ரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 லட்ச ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
மூத்த காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
முன்னதாக டெல்லியில் ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 ஊக்கத் தொகை வழங்கும் 'பியாரி திதி யோஜனா' திட்டத்தை காங்கிரஸ் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
X