search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டி: டெல்லி காங்கிரஸ் அறிவிப்பு
    X

    சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டி: டெல்லி காங்கிரஸ் அறிவிப்பு

    • ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்தது மக்களவை தேர்தலுக்கு மட்டுமே.
    • வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என டெல்லி காங்கிரஸ் தெரிவித்தது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மாநில காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் தொண்டர்களிடம் பேசியதாவது:

    பூத் அளவில் கட்சியை வலுப்படுத்தவும், மாநிலத்தில் காங்கிரஸை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரவும் தொகுதி மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

    இந்த கூட்டங்கள் கட்சித் தொண்டர்களுக்கு புத்துணர்ச்சி அளித்துள்ளது. வரவிருக்கும் டில்லி சட்டசபை தேர்தலில் கட்சி சிறப்பாக செயல்படும்.

    சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரசின் ஓட்டு சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது. மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என்பதற்கு இது ஒரு தெளிவான அறிகுறி.

    ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்தது மக்களவை தேர்தலுக்கு மட்டுமே. எனவே, வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும்.

    ஆட்சியில் உள்ள அரசு தங்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு பதிலாக சாக்குப்போக்கு கூறிவருகிறது என தெரிவித்தார்.

    Next Story
    ×