search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாபரின் பெயரில் ராமர் கோவிலுக்கு காங்கிரஸ் பூட்டு போட்டுவிடும் - பிரதமர் மோடி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    'பாபரின் பெயரில்' ராமர் கோவிலுக்கு காங்கிரஸ் பூட்டு போட்டுவிடும் - பிரதமர் மோடி

    • விளையாட்டிலும் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிப்பதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம்
    • இந்திய கிரிக்கெட் அணியில் யார் இருக்க வேண்டும் என்பதை மத அடிப்படையில் முடிவு செய்வார்கள்

    மத்தியபிரதேச மாநிலம் தார் பகுதியில் நேற்று பிரதமர் மோடி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது பேசிய அவர், "விளையாட்டிலும் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிப்பதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்திய கிரிக்கெட் அணியில் யார் இருக்க வேண்டும் என்பதை மத அடிப்படையில் முடிவு செய்வார்கள்.

    1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த போது காங்கிரஸ் ஏன் அதை 3 துண்டுகளாக பிரித்தார்கள். அவர்கள் அப்போதே முழு நாட்டையும் பாகிஸ்தானாக மாற்றி இந்தியாவின் தடயங்களை அழித்திருக்க வேண்டும்.

    மோடி உயிருடன் இருக்கும் வரை போலி மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்தியாவை அழிக்க விட மாட்டேன். ராமர் கோயில் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய காங்கிரஸ் விரும்புகிறது.

    பாஜக 400 இடங்களில் வெல்ல வேண்டும். இல்லையென்றால் 'பாபரின் பெயரில்' ராமர் கோவிலுக்கு காங்கிரஸ் பூட்டு போட்டுவிடும் மற்றும் ஜம்மு காஷ்மீரின் 370 சட்டப்பிரிவை காங்கிரஸ் மீண்டும் கொண்டுவரும்" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×