என் மலர்
இந்தியா
2022-23-ல் பிரதமர் கேர்ஸ் நிதிக்கான பங்களிப்பு வெகுவாக குறைவு
- 2020-21-ம் ஆண்டில் பிரதமர் கேர்ஸ் நிதிக்கு 7,184 கோடி ரூபாய் பங்களிப்பு மூலம் கிடைத்தது.
- 2022-23 பங்களிப்பு 912 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலை நிவாரண நிதி( Prime Minister's Citizen Assistance and Relief in Emergency Situations (PM CARES)) விருப்பமுள்ளவர் முடிந்த தங்களது பங்களிப்பை வழங்குவதற்காக தொடங்கப்பட்டது. பேரிடர் போன்ற இயற்கை சீற்றங்களால் மக்கள் பாதிக்கப்படும்போது பிரதமர் கேர்ஸ் நிதியில் இருந்து நிதி வழங்கப்படுவதற்காக இது தொடங்கப்பட்டுள்ளது.
கொரோனா பேரிடர் தொற்றுக்குப் பிறகு மார்ச் 2020-ல் பொது தொண்டு அறக்கட்டளையாக தொடங்கப்பட்டது. 2020-21-ம் ஆண்டில் பிரதமர் கேர்ஸ் நிதிக்கு 7,184 கோடி ரூபாய் பங்களிப்பு மூலம் கிடைத்தது.
2021-2022-ல் பங்களிப்பு 1,938 கோடியாக ரூபாயாக குறைந்தது. 2022-23 பங்களிப்பு 912 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. பிரதமர் கேர்ஸ் நிதி இணைய தளத்தில் இருந்து இந்த தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
அதேபோல் வெளிநாட்டு நிதி பங்களிப்பும் வெகுவாக குறைந்துள்ளது. 2020-21-ல் 495 கோடி ரூபாயாக இருந்தது. அதன்பின் 40 கோடியாக குறைந்த நிலையில் 2022-23-ல் 2.57 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
2022-23-ல் மொத்த செலவு 439 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமரின் குழந்தைகள் பராமரிப்பு திட்டத்திற்கு 346 கோடி ரூபாய் விடுவித்துள்ளது. கொரோனா தொற்றின்போது பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு உதவும் வகையில் இந்த பணம் விடுவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமயைில் ஆக்சிஜன் நிலையம் மற்றும் வென்டிலேட்டர் போன்றவை வாங்குவதற்காக பிரதமர் கேர்ஸ் நிதியில் இருந்து பணம் செலவழிக்கப்பட்டுள்ளது.
2021-22-ல் ஆக்சிஜன் நிலையம் அமைப்பதற்கு மட்டும் 1703 கோடி ரூபாய் இந்த நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. 835 கோடி ரூபாய் வென்டிலேட்டர்கள் வாங்குவதற்கு செலவழிக்கப்பட்டள்ளது.
2022-23-ல் பிரதமர் கேர்ஸ் நிதியில் 6283 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது என இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.