search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த தம்பதி தற்கொலை
    X

    ஆந்திராவில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த தம்பதி தற்கொலை

    • வருகிற ஆகஸ்டு மாதம் 2-ந் தேதிக்குள் பணத்தை திருப்பி தருவதாக உறுதி அளித்து விட்டு வந்தனர்.
    • கணவன் மனைவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மதுரவாடாவை சேர்ந்தவர் பிரசாத் (வயது 54). இவரது மனைவி ராஜராஜேஸ்வரி (50).

    இவர்கள் இருவரும் ஸ்மார்ட் வில்லேஜ் மேம்பாடு திட்டம் என்ற பெயரில் ஸ்ரீகாக்குளம் மாவட்டம் காவிடியில் ஒரு தனியார் நிறுவனத்தை தொடங்கினர்.

    வேலைவாய்ப்பு இல்லாத படித்த இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து அதன் பின்னர் வேலை வாங்கி தருவதாக விளம்பரம் செய்தனர்.

    இதனை நம்பிய ஆயிரக்கணக்கான பட்டதாரி வாலிபர்கள் இவர்கள் நிறுவனத்தை அணுகினர். அப்போது வேலைக்கு ஏற்றவாறு ரூ.20 முதல் 25 ஆயிரம் வரை வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என தெரிவித்தனர். கட்டாயம் வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் வாலிபர்கள் போட்டி போட்டு பணத்தை செலுத்தினர். பணம் செலுத்தி பல மாதங்கள் ஆகியும் வேலையும் கிடைக்கவில்லை பயிற்ச்சியும் அளிக்கவில்லை.

    இதனால் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பிரசாத் நிறுவனத்தை அணுகி வேலை கொடுங்கள் அல்லது டெபாசிட் பணத்தை திருப்பி தர வேண்டுமென கூறினர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீஸ் நிலையங்களில் பிரசாத் அவரது மனைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.தம்பதியினருக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து பிரசாந்த் தனது வீட்டை விற்பனை செய்து ஒரு சிலருக்கு மட்டும் பணத்தை திருப்பி கொடுத்தார்.

    போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை செய்தபோது வருகிற ஆகஸ்டு மாதம் 2-ந் தேதிக்குள் பணத்தை திருப்பி தருவதாக உறுதி அளித்து விட்டு வந்தனர்.

    பிரசாந்த் எதிர்பார்த்தபடி பணம் கிடைக்காததால் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த பி எம் பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணவன் மனைவி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×