என் மலர்
இந்தியா
விண்வெளியில் காராமணி பயறு விதைகளில் இருந்து முதல் 'இலைகள்' வெளிவந்தன- இஸ்ரோ அறிவிப்பு
- PSLV-C60 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு காராமணி பயறு விதைகள் வைத்து அனுப்பப்பட்டன.
- விண்வெளியில் தாவர வளர்ச்சிக்கான CROPS திட்டம் வெற்றியடைந்ததாக இஸ்ரோ அறிவித்தது.
விண்வெளியில் தாவரங்கள் வளர்கிறதா என்பது குறித்து இஸ்ரோ சோதனை செய்து வருகிறது. அந்த வகையில், கடந்த டிசம்பர் 30-ம் தேதி PSLV-C60 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட CROPS கருவியில் காராமணி பயறு விதைகள் வைத்து அனுப்பப்பட்டன.
விண்வெளியில் தாவரம் வளர்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய அனுப்பப்பட்ட CROPS கருவியில் வைக்கப்பட்ட காராமணி பயறு விதைகள் முளைக்கத் தொடங்கிய நிலையில், அதில் இருந்து முதல் 'இலைகள்' வெளிவந்துள்ளன.
அதாவது விண்வெளியில் 4 நாட்களுக்குள் காராமணி பயறு விதைகள் முளைத்தது என்றும் அதற்கு அடுத்த நாட்களில் காராமணி பயறு விதைகளில் இருந்து முதல் 'இலைகள்' வெளிவந்தன என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதன்மூலம் விண்வெளியில் தாவர வளர்ச்சிக்கான CROPS (Compact Research Module for Orbital Plant Studies) திட்டம் வெற்றியடைந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்தது.
சுற்றுவட்டப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் ராக்கெட் தொகுதியில் விதை மற்றும் இலைகள் முளைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Leaves have emerged! ? VSSC's CROPS (Compact Research Module for Orbital Plant Studies) aboard PSLV-C60 POEM-4 achieves a milestone as cowpea sprouts unveil their first leaves in space. ? #ISRO #BiologyInSpace #POEM4 pic.twitter.com/xKWmGHoPfl
— ISRO (@isro) January 6, 2025