search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    அமெரிக்காவால் தேடப்பட்ட குற்றவாளி.. இந்திய உளவுத்துறை முன்னாள் அதிகாரி டெல்லியில் கைது -  பின்னணி
    X

    அமெரிக்காவால் தேடப்பட்ட குற்றவாளி.. இந்திய உளவுத்துறை முன்னாள் அதிகாரி டெல்லியில் கைது - பின்னணி

    • இந்திய உளவுத் துறை முன்னாள் அதிகாரி மீது கூலிக்கு கொலை செய்தல், பணமோசடி பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • டெல்லியில் இருந்த அவரை சிறப்பு தனிப்படை போலீஸ் கைது செய்துள்ளது

    அமெரிக்காவில் நியூ யார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு 'சீக்கியர்களுக்கு நீதி' என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங். இவர் இந்தியாவில் இருந்து சீக்கியர்களுக்கு தனி நாடு கோரும் காலிஸ்தான் ஆதரவாளர் ஆவார்.

    இவரைக் கொலை செய்ய இந்தியா சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதை இந்தியா மறுத்து வந்த நிலையில் தற்போது இந்திய உளவு அமைப்பான ரா [RAW] அமைப்பைச் சேர்ந்த முன்னாள் அதிகாரி விகாஷ் யாதவ் என்பவருக்கு இந்த கொலை முயற்சியில் தொடர்பு உள்ளதாக அமெரிக்காவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர் ரா அமைப்பால் போர் கலை மற்றும் ஆயுதங்களைக் கையாளுதல் ஆகியவற்றில் அதிகாரிக்கான பயிற்சிகளைப் பெற்றுள்ளார்.

    இந்திய அரசு அதிகாரியான இவர், மற்றொரு குற்றவாளியுடன் இணைந்து அமெரிக்க குடிமகனை கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறார் என்று எப்.பி.ஐ. இயக்குனர் கிறிஸ்டோபர் ரே கூறினார். இந்த கொலை வழக்கில் விகாஸ் யாதவ் முதன்மை குற்றவாளி அல்ல. "CC-1" (co-conspirator) அதாவது இணைச் சதிகாரர் என்று கருதப்படுகிறார். இந்த வழக்கின் முதன்மைக் குற்றவாளி நிகில் குப்தா கடந்த ஆண்டு செக் குடியரசு நாட்டில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

    இந்நிலையில் அமெரிக்க காவல்துறையான FBI விகாஸ் யாதவை தேடி வந்த நிலையில் டெல்லியில் இருந்த அவரை சிறப்பு தனிப்படை போலீஸ் கைது செய்துள்ளது. இவ்வழக்கு தொடர்பாக அமெரிக்க நீதித்துறை (DoJ) குற்றப்பத்திரிகையில் புகைப்படத்துடன் தேடப்படும் குற்றவாளியாக விகாஸ் யாதவை அறிவித்து, அவர் மீது கூலிக்கு கொலை செய்தல், பணமோசடி உள்ளிட்ட குற்றங்கள் ஈடுபட்டதாக வழக்குப்பதிந்திருந்தது.

    இந்த வழக்கில் அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பதாகக் கூறியுள்ள இந்திய அரசு விகாஷ் யாதவ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. முன்னதாக கனடாவில் கடந்த ஜூன் மாதம் கொல்லப்பட்ட காலிஸ்தான் ஆதரவாளர் ஹாதீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசுக்கு தொடர்புள்ளதாகக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்த குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தின. இதனால் இரு நாட்டின் தூதரக உறவும் மொத்தமாக முறியும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய தூதரக ஆதிகாரிகள் லாரன்ஸ் பிஸ்னாய் தாதா கும்பலுடன் தொடர்பு வைத்து குற்றச்செயல்களை ஊக்குவிப்பதாக ட்ரூடோ குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×