search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அபாய அளவை தாண்டியது- டெல்லி யமுனை ஆற்றின் நீர்மட்டம் மீண்டும் உயர்வு
    X

    அபாய அளவை தாண்டியது- டெல்லி யமுனை ஆற்றின் நீர்மட்டம் மீண்டும் உயர்வு

    • நேற்று மாலை 6 மணி நிலவரப்படி யமுனை ஆற்றின் நீர்மட்டம் 205.34 மீட்டர் ஆக உள்ளது.
    • உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

    டெல்லி, உத்தரகாண்ட், இமாசலப்பிரதேசம், உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த 1 வாரத்துக்கு மேலாக மழை கொட்டி தீர்த்து வருகிறது.

    இதனால் கங்கை மற்றும் யமுனை ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    இந்நிலையில் டெல்லியில் நேற்று மீண்டும் மழை பெய்தது. இதனால் வெள்ளம் குறைந்திருந்த யமுனை ஆற்றில் மீண்டும் தண்ணீர் அதிகரித்தது.

    இதனால், யமுனை ஆற்றின் நீர்மட்டம் மீண்டும் அபாய அளவை தாண்டியுள்ளது.

    அதன்படி, நேற்று மாலை 6 மணி நிலவரப்படி யமுனை ஆற்றின் நீர்மட்டம் 205.34 மீட்டர் ஆக உள்ளது. இது இரவு 11 மணியளவில் 205.45 மீட்டராக உயர்ந்துள்ளது.

    இதற்கிடையே, உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் ஒரு சில இடங்களில் ஜூலை 22 (இன்று) வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    Next Story
    ×