search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அதிதீவிர புயலான பிபோர்ஜோய் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும்: 3 மாநிலங்களுக்கு எச்சரிக்கை
    X

    அதிதீவிர புயலான பிபோர்ஜோய் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும்: 3 மாநிலங்களுக்கு எச்சரிக்கை

    • அரபிக்கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக வலுவடைந்தது
    • குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

    அரபிக்கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அதி தீவிர புயலாக வலுவடைந்துள்ளது. இந்த அதிதீவிர புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகரும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தற்போது இந்த புயல் கோவாவின் மேற்கு திசையில் 690 கி.மீட்டர் தூரத்திலும், மும்பையில் இருநது 640 கி.மீட்டர் மேற்கு- தென்மேற்கு திசையிலும், போர்பந்தரில் இருந்து தெற்கு-தென்மேற்கு திசையில் 640 கி.மீட்டர் தொலையில் நிலைகொண்டுள்ளது. தற்போது 145 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசிக் கொண்டிருக்கிறது.

    கர்நாடகா, கோவா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகன மழை மற்றும் காற்று வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.

    குஜராத் மாநிலத்தில் உள்ள பிரபல திதால் கடற்கரை முன்எச்சரிக்கை காரணமாக ஜூலை 14-ந்தேதி வரை மூடப்பட்டுள்ளது.

    ஞாயிறு (நாளை) அல்லது திங்கிட்கிழமை குஜராத்தின் தெற்குபகுதியை அடைய வாய்ப்புள்ளது. அனைத்து அரசு அதிகாரிகளையும் துரிதமாக செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்படுவார்கள் என சூரத் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    புயலுக்கு வங்காளதேசம் இந்த பெயரை சூட்டியுள்ளது. இதற்கு பெங்காலில் பேரழிவு என்பது பொருள். கடந்த 2020-ல் இருந்து புயல்களுக்கு பெயர் சூட்டப்பட்டு வருகிறது.

    Next Story
    ×