என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
இந்தியா, சீனா எல்லைப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவேண்டும் - தலாய் லாமா வலியுறுத்தல்
- 4 ஆண்டுகளுக்கு பின் லடாக் சென்ற தலாய் லாமாவுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- ராணுவ பலத்தைப் பயன்படுத்துவது பயனற்றது என தலாய் லாமா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர்:
திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமா ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
தலாய் லாமா நேற்று மதியம் லே விமான நிலையத்தை வந்தடைந்தார். 4 ஆண்டுக்கு பின் லடாக் சென்ற தலாய் லாமாவுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், இந்தியா மற்றும் சீனா தங்கள் எல்லை பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என தலாய் லாமா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தலாய் லாமா பேசுகையில், இந்தியாவும் சீனாவும் போட்டி மற்றும் அண்டை நாடுகள். இரு நாடுகளும் விரைவில் பேச்சுவார்த்தை மற்றும் அமைதியான வழிகளில் எல்லை பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். ராணுவ பலத்தைப் பயன்படுத்துவது பயனற்றது என குறிப்பிட்டார்.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான ராணுவ கமாண்டர்கள் அளவிலான உயர்மட்ட 16-வது சுற்று பேச்சுவார்த்தைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், இந்த பயணத்தை அவர் மேற்கொண்டதை சீனாவுக்கு ஓர் எச்சரிக்கை என பார்க்கப்படுகிறது.