என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
திருட்டு வழக்கில் தலித் பெண்ணுக்கு போலீஸ் ஸ்டேஷனில் சித்ரவதை.. காலை உடைத்த கொடூரம்
- போலீசார் அவர்களின் முன்னிலையில் எனது சேலையை கழற்றிவிட்டு சார்ட்ஸ் அணியும்படி கட்டாயப்படுத்தினர்.
- எனது தலைமுடியை ஒரு போலீஸ் அதிகாரி பிடித்துக்கொள்ள, மற்ற இரு போலீசார் எனது இரண்டு கால்கள் மீதும் கட்டையை வைத்து தாக்கினர்
தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள சாத்நகர்[Shadnagar] காவல்நிலையத்தில் திருட்டு வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் அழைத்துவரப்பட்ட தலித் பெண் அடித்து சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் திருடுபோன வழக்கில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை சந்தகேத்தில் அடிப்படையில் அழைத்து வந்த போலீசார், அவர்களது மகன் முன்னிலையிலேயே இந்த வெறிச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில் சம்பந்தப்பட்ட போலீசாரை விசாரிக்க ACP உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலில் அவர்கள் எனது கணவனைப் பிடித்து வந்து அடித்தனர். அதன்பின் அவரை வெளியில் விட்டுவிட்டு என்னைப் பிடித்து வந்தனர். போலீசார் அவர்களின் முன்னிலையில் எனது சேலையை கழற்றிவிட்டு சார்ட்ஸ் அணியும்படி கட்டாயப்படுத்தினர். எனது கை, கால்களை கட்டிவைத்து, என்னை தாக்கத் தொடங்கினர்.
எனது தலைமுடியை ஒரு போலீஸ் அதிகாரி பிடித்துக்கொள்ள, மற்ற இரு போலீசார் எனது இரண்டு கால்கள் மீதும் கட்டையை வைத்து தாக்கினர். செய்யாத குற்றத்திற்காக என்னை அடிக்காதீர்கள் என்று நான் அவர்களிடம் கெஞ்சினேன். திருடுவதற்கு பதிலாக நான் பிச்சையே எடுப்பேன் என்று கூறினேன். ஆனால் அவர்கள் எனது காலை உடைந்தனர்.
எனது கால் உடைந்துவிட்டது என்று வலியால் கத்தியபடி அவர்களிடம் கூறியும் அதை அவர்கள் நம்பவில்லை. அந்த நிலையில் என்னை எழுந்து நடக்கச் சொன்ன அவர்கள், அப்படி செய்யாவிட்டால் எனது கால்களை நிரந்தரமாக செயலிழக்கும்படி உடைப்போம் என்று மிரட்டியதாக தெரிவித்தார்.
திருட்டு வழக்கில் எப்.ஐ.ஆர் பதியாமலேயே சந்தேகத்தின் பேரில் பெண்ணை அழைத்துவந்து சட்டவிரோதமாக அடித்துத் துன்புறுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்