search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் என்ற பெயரில் ஆடலும் பாடலும்தான் நடந்தது - ராகுல் காந்தி
    X

    'அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் என்ற பெயரில் ஆடலும் பாடலும்தான் நடந்தது' - ராகுல் காந்தி

    • அயோத்தி தொகுதியில் இந்தியா கூட்டணியில் வேட்பாளர் பாஜக வேட்பாளரை தோற்கடித்தார்
    • ஆதிவாசி சமூகத்தை சேர்ந்தவர் என்ற காரணத்தால் குடியரசுத் தலைவர் அழைக்கப்படாததை இந்தியர்கள் பார்த்துகொன்டுதான் இருந்தனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட தீவிர இந்து அமைப்பினரால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பகுதியில் மத்திய பாஜக அரசின் முன்னெடுப்பில் ரூ.1,800 கோடி பொருட்செலவில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோவில் உள்ளது. கட்டுமானப் பணிகள் மீதமிருந்த நிலையில் கடந்த கடந்த ஜனவரி 22 ஆம் தேதி அவசர அவசரமாக கோவிலின் மூல விக்ரகமான பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா பிரமாண்டமான முறையில் நடத்தி முடிக்கப்பட்டது.

    இது மக்களவைத் தேர்தளுக்காக பாஜக நடத்திய நாடகமென எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள இந்தியாவின் சினிமா, அரசியல் மற்றும் வியாபார பெரும்புள்ளிகள் பலர் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அழைக்கப்படாதது சர்ச்சையானது. தங்களுக்கு வந்த அழைப்பை நிராகரித்த காங்கிரஸ் இந்த விழா பெரும் பணக்காரர்களுக்காக நடத்தப்படுவது என்றும் அடித்தட்டு மக்களும் உழைப்பாளிகளும் அழைக்கப்படாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பி இருந்தது. அந்த சமயத்தில் பாரத நீதி யாத்திரையில் இருந்த ராகுல் காந்தி இந்த கருத்தை முன்வைத்திருந்தார்.

    அயோத்தியில் ராமர் கோவிலை மையப்படுத்தி வியாபாரங்களில் பெருக்கமும், விமான நிலைய கட்டுமானமும் ஏற்படும் என்று பாஜக வாதிட்டுவரும் நிலையில் அங்கு வசிக்கும் மக்களது விவசய நிலங்கள் பெரு நிறுவன வியாபாரிகளால் அரசின் உதவியுடன் கையகப்படுத்தப்பட்ட வருகிறது என்ற குற்றச்சாட்டை சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் எழுப்பி வருகிறார்.

    இதற்கிடையே நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அயோத்தி தொகுதியில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற சமாஜ்வாதி வேட்பாளர் அவதேஷ் பிரசாத், பாஜக வேட்பாளரைத் தோற்கடித்து வெற்றி பெற்றது பாஜகவுக்கு பேரிடியாக அமைந்ததது. இந்நிலையில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா குறித்து தற்போது மக்களவை எதிர்கட்சித் தலைவர் பொறுப்பில் இருக்கும் ராகுல் காந்தி மீண்டும் விமர்சித்துள்ளார்.

    அரியானா சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அங்கு பிரச்சாரம் செய்து வரும் ராகுல் காந்தி ஹிஸார் [Hisar] நடந்த கூட்டத்தில் பேசும்போது, அயோத்தி ராமர் கோவில் பிரான பிரதிஷ்டை விழாவுக்கு ஆதிவாசி சமூகத்தை சேர்ந்தவர் என்ற காரணத்தால் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அழைக்கப்படாததை இந்தியர்கள் பார்த்துகொன்டுதான் இருந்தனர். எனவேதான் அயோத்தியில் அவதேஷ் பிரசாத் வெற்றி பெற்றார்.

    அவர்கள் [பாஜக] அமிதாப் பச்சனையும் அம்பானியையும், அதானியையும் அழைத்து விழா நடத்தினர். எந்த ஒரு தொழிலாளியோ விவசாயியோ பிராண அழைக்கப்படவில்லை. ராமர் பிராண பிரதிஷ்டை விழா என்ற பெயரில் அங்கு ஆடலும் பாடலுமே நடந்தது. இதுதான் நிதர்சனம். ஏழைகள் அங்கு அழைக்கப்படவில்லை என்று விமர்சித்துள்ளார். இதற்கிடையே ராமர் கோவில் பற்றி பேசி ராகுல் காந்தி மிகப்பெரிய தவறு செய்துவிட்டார் என்றும் அதற்கு அவர் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று பாஜக சாடியுள்ளது.

    Next Story
    ×