search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காது கேளாத, வாய் பேச முடியாத 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. காயங்களால் உயிரிழந்த சோகம்
    X

    காது கேளாத, வாய் பேச முடியாத 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. காயங்களால் உயிரிழந்த சோகம்

    • அரசு ஓய்வு இல்லத்திற்குப் பின்னால் உள்ள குடிசையில் சிறுமி வசித்து வந்தாள்.
    • சிறுமியுடன் தொடர்பு கொள்ள சைகை மொழி நிபுணர்களை அழைத்து வந்தோம்.

    மத்தியப் பிரதேசத்தில் காது கேளாத வாய் பேச முடியாத 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு அடையாளம் தெரியாத நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட காது கேளாத மற்றும் பேச்சு குறைபாடுள்ள 11 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள்.

    நர்சிங்கர் நகரில் உள்ள அரசு ஓய்வு இல்லத்திற்குப் பின்னால் உள்ள ஒரு குடிசையில் வசித்து வந்த சிறுமி, பிப்ரவரி 1 ஆம் தேதி காணாமல் போனாள். மறுநாள் ஒரு காட்டில் பலத்த காயமடைந்த நிலையில் அவள் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    நரசிங்கர் துணைப்பிரிவு காவல் அதிகாரி உபேந்திர பாட்டி கூறுகையில், சிறுமிக்கு அதிக இரத்தபோக்கு ஏற்பட்டிருந்தது. முதலில் நரசிங்கரில் உள்ள சிவில் மருத்துவமனைக்கும், பின்னர் பிப்ரவரி 2 ஆம் தேதி போபாலில் உள்ள ஹமீடியா மருத்துவமனைக்கும் சிறுமி கொண்டுசெல்லப்பட்டாள். அங்கு அவளுக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன

    வென்டிலேட்டரில் வைக்கப்பட்ட சிறுமி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் அவள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

    பாலியல் வன்கொடுமை செய்தவரை அடையாளம் காணும் வகையில், சிறுமியுடன் தொடர்பு கொள்ள சைகை மொழி நிபுணர்களை போலீசார் அழைத்ததாகவும், ஆனால் உடலின் உள்பகுதியில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக சிறுமி மயக்கமடைந்தாள். குற்றவாளியைக் கண்டுபிடிப்பதற்கான தடயங்களை போலீசார் தேடி வருவதாக அவர் தெரிவித்தார்.

    இதற்கிடையில், பாதிக்கப்பட்டவரின் இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை பிற்பகல் நரசிங்கரில் மேற்கொள்ளப்பட்டன.

    Next Story
    ×