என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ராணுவ வீரர்களின் நலனில் அக்கறை கொள்வது அனைவரின் கடமை- பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்
- கொடிநாள் நிதிக்கு பொதுமக்கள் தாராளமாக உதவி செய்ய வேண்டும்.
- ஓய்வு பெறும் இளம் ராணுவ வீரர்களுக்கு தனியார் நிறுவனங்கள் உதவ வேண்டும்.
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை சார்பில் டெல்லியில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், ஆயுதப்படைகளின் கொடிநாள் நிதிக்காக, http://www.affdf.gov.in/என்ற புதிய இணையதளத்தை அறிமுகம் செய்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:
சுதந்திரம் முதல், போர்களில் வெற்றி பெறுவது, எல்லைகளில் தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்வதிலும் நமது வீரர்கள் ஏராளமானோர் தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர். பலர் உடல் ஊனமுற்றனர். எனவே நமது வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆதரவளிப்பது நமது தலையாய கடமை. எல்லைகளில் எப்போதும் விழிப்புடன் இருக்கும் நமது துணிச்சலான ராணுவ வீரர்களால் தான், அச்சமின்றி நாம் நமது இல்லங்களில் நிம்மதியாக உறங்க முடிகிறது.
நம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் ராணுவ வீரர்களின் நலனில் அக்கறை கொள்வது அரசின் பொறுப்பு மட்டுமல்ல, அது அனைவரின் கடமை. தேச பாதுகாப்பு வலுவாக இல்லாமல், எந்த ஒரு நாட்டிலும் தொழில்துறைகளும், வர்த்தகமும் வளர முடியாது. என்று தெரிவித்தார். ராணுவ வீரர்களின் நலனுக்காக பெரும் நிறுவனங்கள் வழங்கி வரும் நன்கொடையை மேலும் அதிகரிக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் இளம் வயதில் சுமார் 60,000 ராணுவ வீரர்கள் ஓய்வு பெறுகின்றனர். அவர்களுக்கு தனியார் துறையினர் வேலை வழங்க வேணடும். ஆயுதப் படைகளின் கொடி நாள் நிதிக்கு பொதுமக்கள் தாராளமாக உதவ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.