என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மகாராஷ்டிரா: தாமதமாக அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதி- எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
- மகாராஷ்டிராவில் தேர்தல் நடைபெற இன்னும் 35 நாட்களே உள்ளன.
- மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி அரசு தோல்வியடையும்.
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
மொத்தம் 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை பதவிக்காலம் நவம்பர் மாதம் 26-ந்தேதி முடிவடைகிறது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் நவம்பர் 20-ம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23ம் தேதி எண்ணப்பட உள்ளன.
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாரதிய ஜனதா, அஜித்பவார் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
உத்தவ் தாக்கரே தலையிலான சிவசேனா, காங்கிரஸ் மற்றும் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவுள்ளன.
இந்நிலையில், சட்டசபை தேர்தல் தேதியை தாமதமாக வெளியிட்டு ஆளும் பாஜக கூட்டணி அரசிற்கு தேர்தல் ஆணையம் உதவி செய்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் விஜய் வடேட்டிவார், "அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை இறுதி செய்வதற்கும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கும், தேர்தல் பிரச்சாரத்துக்கும் குறைந்தபட்சம் 40 நாட்களுக்கு முன்பாகவே தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கும். ஆனால் மகாராஷ்டிராவில் தேர்தல் நடைபெற இன்னும் 35 நாட்களே உள்ளன. இது வழக்கத்திற்கு மாறானது மற்றும் தேர்தல் பிரசாரம் செய்ய எங்களுக்கு குறைவான நாட்களே உள்ளது.
தேர்தல் தேதி தாமதமாக அறிவிக்கப்பட்டதால் அந்த இடைப்பட்ட காலத்தில் பாஜக கூட்டணி அரசாங்கம் பலவேறு திட்டங்களை அறிவித்து அரசு கஜானாவை காலி செய்து விட்டது" என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிரா தேர்தல் தொடர்பாக பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத்சந்திர பவார்) மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல், "மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தலை 5 கட்டங்களாக தேர்தல் ஆணையம் நடத்தியது. ஆனால் தற்போது ஒரே கட்டமாக சட்டசபைக்கு தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளது. மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி அரசு தோல்வியடையும்.
சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்பு முன்னதாகவே வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பல நலத்திட்டங்களை அறிவிக்க மாநில அரசுக்கு போதுமான கால அவகாசத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது" என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிரா தேர்தல் தொடர்பாக சிவசேனா (உத்தவ் தாக்கரே) தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், "மக்களவை தேர்தலுடன் ஒப்பிடும்போது, இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனாவின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து பல எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் சரியாக பதிலளிக்கவில்லை" என்று தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்