என் மலர்
இந்தியா

இரட்டை இலை சின்னம் விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு
- வழக்கு விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றது.
- புகழேந்தியின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் முடித்து வைத்து டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஐகோர்ட்டில் புகழேந்தி சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த ஐகோர்ட் புகழேந்தியிடம் புதிதாக ஒரு மனுவை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது. இது தொடர்பாக புகழேந்தியின் மனு மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து தேர்தல் ஆணையம் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர்கள் ஜானேஷ்குார், சுக்பீர் சிங் சாந்து ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றது. அப்போது இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் புகழேந்தி அளித்துள்ள மனு மீது விசாரணை நடத்தி விரைந்து தீர்வு காண வேண்டும் என்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும் புகழேந்தியின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் முடித்து வைத்து டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.






