என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ரக்ஷா பந்தனை முன்னிட்டு கூடுதலாக 106 முறை ரெயில்கள் இயக்க முடிவு- டெல்லி மெட்ரோ அறிவிப்பு
- டிக்கெட் கவுன்டர்களில் நெரிசலைத் தவிர்க்க, QR குறியீடு அடிப்படையிலான டிக்கெட்டு
- கூட்ட நெரிசலைக் குறைக்க கூடுதல் காத்திருப்பு ரெயில்களும் சேவையில் சேர்க்கப்படும்
ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக டெல்லி மெட்ரோ ரெயில் இன்று கூடுதலாக 106 முறை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களில், பயணிகளின் கூடுதல் நெரிசலைப் பூர்த்தி செய்ய கூடுதல் டிக்கெட் கவுன்டர்கள் இயக்கப்படுகிறது. கூடுதலாக டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) பணியாளர்களும் நிலையங்களில் நிறுத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேவைப்பட்டால், கூட்ட நெரிசலைக் குறைக்க கூடுதல் காத்திருப்பு ரெயில்களும் சேவையில் சேர்க்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
டிக்கெட் கவுன்டர்களில் நெரிசலைத் தவிர்க்க, QR குறியீடு அடிப்படையிலான டிக்கெட்டுகளை வாங்க, டிஎம்ஆர்சி டிராவல் மொபைல் செயலியைப் பயன்படுத்துமாறு பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பயணிகளுக்கு உதவவும் வழிகாட்டவும் முக்கிய மெட்ரோ நிலையங்களில் காவலர்கள் மற்றும் வாடிக்கையாளர் வசதி முகவர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.