என் மலர்
இந்தியா
நடுவானில் இப்படியா செய்வீங்க? விமான பயணிகளை நொந்து கொண்ட இன்ஸ்டா பிரபலம்
- நடுவானில் நின்றுக் கொண்டு வந்ததாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
- அவர்கள் அதனை ஏற்கவில்லை என்று கூறியுள்ளார்.
தாய்லாந்துக்கு செல்லும் தாய் ஏர்ஏசியா விமானத்தில் நடைபெற்ற சம்பவத்தை இன்ஸ்டா பிரபலம் ஒருவர் விமர்சித்துள்ளார். இந்தியாவில் இருந்து தாய்லாந்து பயணம் மேற்கொண்ட அங்கித் குமார் என்பவர், தன்னுடன் விமானத்தில் பயணித்தவர்கள் நின்றுக் கொண்டு வந்ததாகவும், நடுவானில் சாப்பிட்டதாகவும் கூறி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இத்துடன் அவர் இணைத்துள்ள வீடியோவில் விமானம் நடுவானில் சென்றுக் கொண்டிருக்கும் போது, பயணிகளில் சிலர் இருக்கைகளின் இடையில் நடந்து செல்வதும், உணவு உட்கொள்வதும், இருக்கையின் பின் அமர்ந்து இருப்பவரிடம் திரும்பி உட்கார்ந்து கொண்டு பேசுவதும் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
பயணத்தின் போது இப்படி செய்ய வேண்டாம் என்றும் பயணிகள் தங்கள் இருக்கைகளுக்கு திரும்ப கேபின் குழுவினர் பலமுறை கேட்டுக் கொண்ட போதிலும், அவர்கள் அதனை ஏற்கவில்லை என்று வீடியோவை வெளியிட்டவர் கூறியுள்ளார்.
இது குறித்த வீடியோவில் கூறிய அவர், "இந்தியர்கள் எல்லா இடங்களிலும் அவமதிக்கப்படுவதை ரசிக்கிறார்கள். அவர்கள் விமானத்தை ரெயிலாகவோ அல்லது பேருந்தாகவோ மாற்றிவிட்டார்கள். அவர்கள் நின்று பயணம் செய்கிறார்கள். விமானம் தரையிறங்கவில்லை, அது இன்னும் காற்றில் இருக்கிறது," என்று தெரிவித்தார்.
இந்த வீடியோ குறுகிய நேரத்தில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. வீடியோவுக்கு சிலர் ஆதரவாகவும், சிலர் எதிராகவும் கருத்து தெரிவித்தனர்.