என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கோவில் ஏசி மெஷின் குழாயில் வந்த நீரை தீர்த்தம் என்று வரிசைகட்டி பிடித்துக் குடித்த பக்தர்கள் - வீடியோ
- உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா நகரில் பிரசித்தி பெற்ற பங்கே பீஹாரி கோவில் அமைந்துள்ளது.
- தண்ணீர் வெளியேறும் குழாய் அந்த யானை துதிக்கை கட்டமைப்போடு இணைக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த குளிர்சாதன பெட்டி குழாயில் இருந்து வந்த தண்ணீரை தீர்த்தம் என்று நினைத்து பக்தர்கள் வரிசை கட்டி நின்று பிடித்துக் குடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா நகரில் பிரசித்தி பெற்ற பங்கே பீஹாரி கோவில் அமைந்துள்ளது.
கோவில் சுவரில் யானை துதிக்கை வடிவில் அமைக்கப்பட்டிருந்த கட்டமைப்பிலிருந்து தண்ணீர் ஒழுகிக்கொண்டிருந்தது. இந்த நீரானது கிருஷ்ணரின் காலில் இருந்து வரும் தீர்த்தம் என்றும் அதை குடிப்பதால் பிரச்சனைகள் தீரும் என்று நம்பிய அங்கு வந்த பக்தர்கள் வரிசையில் நின்று அதைப் பிடித்துக் குடித்துள்ளனர்.
உண்மையில் உள்ளே அமைக்கப்பட்டிருந்த ஏசி மெஷினில் இருந்து தண்ணீர் வெளியேறும் குழாய் அந்த யானை துதிக்கை கட்டமைப்போடு இணைக்கப்பட்டுள்ளது. எனவே ஏசி மெஷின் கழிவு நீரையே தீர்த்தம் என்று பக்தர்கள் குடித்துள்ளது பின்னர் தெரிய வந்துள்ளது. ஏசி கழிவு நீரை மக்கள் வரிசையில் நின்று பிடிக்கும் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Serious education is needed 100%People are drinking AC water, thinking it is 'Charanamrit' from the feet of God !! pic.twitter.com/bYJTwbvnNK
— ZORO (@BroominsKaBaap) November 3, 2024