என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
தமிழக மீனவர்கள் பிரச்சனை - டெல்லியில் மத்திய மந்திரியை சந்தித்த திமுக எம்.பி. டி.ஆர்.பாலு
- மீனவர்கள் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம் மத்திய மந்திரியிடம் வழங்கப்பட்டது.
- இந்தச் சந்திப்பின்போது மீனவர்களின் குடும்பத்தினரும் உடனிருந்தனர்.
புதுடெல்லி:
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். கைது செய்யப்படும் மீனவர்களை
விடுவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய மந்திரிக்கு கடிதங்களை எழுதி வருகிறார்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மத்திய மந்திரி முரளிதரன் உடன் தி.மு.க. எம்.பி., டி.ஆர்.பாலு நேரில் சந்தித்தார். அப்போது, மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை மத்திய மந்திரியிடம் வழங்கினார்.
அந்தக் கடிதத்தில் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது, மீனவர்களின் குடும்பத்தினரும் உடனிருந்தனர்.
கடிதத்தைப் பெற்றுக் கொண்ட மத்திய இணை மந்திரி முரளிதரன், மீனவர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் என டி.ஆர்.பாலு தெரிவித்தார்.