search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தி ஆதிக்கத்தை எப்போதும் எதிர்ப்போம்- திருச்சி சிவா
    X

    இந்தி ஆதிக்கத்தை எப்போதும் எதிர்ப்போம்- திருச்சி சிவா

    • எந்த மொழியை கற்கவும் திமுக தடையாக இருந்ததில்லை.
    • ஒரு மொழி மீது மற்ற மொழி ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு.

    தமிழகத்தில் இந்தி கற்க முற்பட்டபோது தடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதற்கு திமுக எம்.பி. திருச்சி சிவா பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * இந்தி எங்களை ஆதிக்கம் செலுத்துவதை எல்லா காலத்திலும் எதிர்த்துக்கொண்டே தான் இருப்போம்.

    * எந்த மொழியை கற்கவும் திமுக தடையாக இருந்ததில்லை.

    * ஒரு மொழி மீது மற்ற மொழி ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு என்று கூறினார்.

    முன்னதாக, பாராளுமன்ற மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வங்கி சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்து பேசும்போது, தமிழ்நாட்டில் இந்தி படிக்க அனுமதிக்கவில்லை என்று வேதனை தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், இந்தி மற்றும் சமஸ்கிருதம் கற்றுக்கொள்வது தென் மாநிலங்களில் கேவலமாக பார்க்கப்பட்டது. தமிழ்நாட்டில் நான் இந்தி படிக்க செல்லும்போது தெருக்களில் ஏளனம் செய்யப்பட்டேன். நீ இந்தி படிக்க விரும்புகிறாய். தமிழ்நாட்டில் வாழும் உனக்கு வடமொழி எதற்கு என்று கேட்டனர். அது இன்னும் என் காதுகளில் ஒலிக்கின்றன.

    மதுரையில் பிறந்த என்னை வந்தேரி என்று அழைத்தனர். அது அங்குள்ள அரசியல் வியூகத்தின் ஒரு பகுதி. விரும்பிய மொழியைக் கற்கும் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டது. இந்தி திணிப்பு பேசும் தமிழகத்தில், இந்தி கற்கக் கூடாது என்ற கொள்கை என் மீது திணிக்கப்படவில்லையா? என்று கூறி இருந்தார்.

    Next Story
    ×