என் மலர்
இந்தியா
நாளை காலை பிரதமருடன் சந்திப்பு.. டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
- சென்னையில் இருந்து புறப்பட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார்.
- இன்றிரவு முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார்.
சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகளுக்கும், புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் வழங்க வேண்டிய நிதியை விடுவிக்க கோரியும் பிரதமரை நேரில் சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி கேட்டிருந்தார்.
அதன்படி நாளை (செப்டம்பர் 27) காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி சந்திக்கின்றனர். இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து புறப்பட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார்.
டெல்லி சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எம்.பி. கலாநிதி மாறன், கனிமொழி, டி.ஆர். பாலு, திருச்சி சிவா மற்றும் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்றிரவு முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார்.
நாளை காலை பிரதமர் மோடியை சந்திக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம், தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும்படி வலியுறுத்துகிறார். விரிவான கோரிக்கை மனுவையும் அளிக்க உள்ளார். பிரதமரை சந்தித்து முடித்ததும் நாளை மாலையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.