search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெண் டாக்டரின் பெற்றோரிடம் பேசிய மேற்கு வங்க ஆளுநர்: நீதி கிடைக்கும் என உறுதி
    X

    பெண் டாக்டரின் பெற்றோரிடம் பேசிய மேற்கு வங்க ஆளுநர்: நீதி கிடைக்கும் என உறுதி

    • கொடூரமான சம்பவம் தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினேன்.
    • நாங்கள் அனைவரும் உங்களோடு இருக்கிறோம். உங்களுக்கு நீதி கிடைக்கும்.

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது மேற்கு வங்காள அரசுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை எழுப்பியது. வழக்குப்பதிவு செய்ய காலதாமதம் ஏன்? தந்தையிடம் உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை எனக் கேட்டது. மேலும், மாற்றத்திற்காக நாடு இன்னுமொரு கற்பழிப்பிற்காக காத்திருக்க முடியாது என காட்டமாக தெரிவித்தது.

    இந்த நிலையில் மேற்கு வங்காள மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் உயிரிழந்த பெண் டாக்டரின் பெற்றோரிடம் போன் மூலம் பேசியுள்ளார். வீடியோ காலில் பேசியதை கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ளது.

    ஆளுநர் கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் பெற்றோரிடம் "நாங்கள் அனைவரும் உங்களோடு இருக்கிறோம். உங்களுக்கு நீதி கிடைக்கும். இன்று (நேற்று) நான் டெல்லியில் இருக்கிறேன். இந்த விசயம் தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினேன். உங்களுக்கு வசதியான நேரம் உங்கள் வீட்டிற்கு வருகிறேன்" என அதில் தெரிவித்துள்ளார்.

    "தேசம், ஒட்டுமொத்த தேசமும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மிகுந்த நிம்மதியுடன் கேட்கிறது. ஒவ்வொரு புனிதருக்கும் ஒரு கடந்த காலம் உண்டு. அதேபோல் ஒவ்வொரு பாவிகளுக்கும் ஒரு எதிர்காலம் உண்டு. இதை நினைவில் கொள்ளுங்கள். யாராவது கேட்கிறார்களா? மம்தா பானர்ஜி தயது செய்து கையை உயர்த்துவாரா?" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    ஆளுநர் வீடியோ காலில் பேசியதை வெளியிட்டதை திரிணாமுல் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அந்த கட்சியின் எம்.பி. தெரீக் ஓ'பிரைன் "இன்றைய உங்கள் வீடியோ நீங்கள் வகிக்கும் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியை அவமதிக்கிறது.

    பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையுடன் நீங்கள் தொடர்பு கொண்ட தொலைபேசி அழைப்பு உங்களால் பதிவு செய்யப்பட்டு பின்னர் பகிரங்கப்படுத்தப்பட்டது. இது நெறிமுறையற்றது. தயவு செய்து உங்களது உயர் பதவியை சுய விளம்பரத்திற்காக ஒரு பயங்கரமான சோகத்தை பயன்படுத்த வேண்டாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×