என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு ரூ.14 லட்சம் மதிப்புள்ள தங்க கிரீடம் வழங்கிய துர்கா ஸ்டாலின்
ByMaalaimalar11 Aug 2023 9:49 AM IST (Updated: 11 Aug 2023 9:49 AM IST)
- ரூ.2 லட்சம் மதிப்புள்ள சந்தனம் அரைப்பதற்கான பிரத்யேக எந்திரத்தை குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு துர்கா ஸ்டாலின் வழங்கினார்.
- குருவாயூர் கிருஷ்ணன் கோவில் நிர்வாகம் சார்பில் துர்கா ஸ்டாலினுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
திருவனந்தபுரம்:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள பிரசித்திபெற்ற கிருஷ்ணன் கோவிலுக்கு வந்தார். தனது சகோதரி ஜெயந்தி மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் வந்த அவர், கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
பின்பு 32 பவுன்(256கிராம்) எடையுள்ள தங்க கிரீடத்தை கோவிலுக்கு காணிக்கையாக வழங்கினார். அதனை கோவில் நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். துர்கா ஸ்டாலின் காணிக்கையாக வழங்கிய தங்க கிரீடத்தின் மதிப்பு ரூ.14 லட்சம் ஆகும்.
இதேபோல் ரூ.2 லட்சம் மதிப்புள்ள சந்தனம் அரைப்பதற்கான பிரத்யேக எந்திரத்தையும் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு துர்கா ஸ்டாலின் வழங்கினார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story
×