என் மலர்
இந்தியா
முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைக்கும் பாஜகவின் விளம்பர வீடியோ - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
- ஜார்க்கண்ட் தேர்தலை ஒட்டி பாஜக வெளியிட்ட விளம்பர வீடியோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- பாஜகவின் இந்த விளம்பர வீடியோவிற்கு ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி எதிர்ப்பு தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 13 அன்று நடைபெற்றது.
இந்நிலையில் ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலை ஒட்டி பாஜக வெளியிட்ட விளம்பர வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் ஆட்சி காலத்தில் இந்து குடும்பத்தின் வீட்டிற்குள் கும்பலாக நுழையும் முஸ்லிம் மக்கள் அந்த வீட்டை ஆக்கிரமிப்பு செய்வது போல பாஜகவின் இந்த விளம்பர வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
What a terrible anti-Muslim election advertisement by the BJP in Jharkhand. The sold-out Election Commission will, of course, remain mum! @zoo_bear @svaradarajan @Jairam_Ramesh @MdNadimulHaque6 @mahuamajilive @ECISVEEP pic.twitter.com/DzFU3Edr9D
— Jawhar Sircar (@jawharsircar) November 18, 2024
அதாவது ஜார்க்கண்ட் மாநிலத்தில் முஸ்லிம் மக்கள் சட்டவிரோதமாக ஊடுருவி இந்துக்களுக்கு ஆபத்து விளைவிக்கிறார்கள் என்ற பாஜகவின் வெறுப்பு பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்த விளம்பர வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
பாஜகவின் இந்த விளம்பர காணொளிக்கு ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி எதிர்ப்பு தெரிவித்தார்.
பாஜகவின் இந்த விளம்பர வீடியோ தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, தேர்தல் விதிமுறைகளை மீறி முஸ்லிம் மக்களை தவறாக சித்தரிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் பாஜக வெளியிட்ட தேர்தல் பரப்புரை விளம்பரத்தை நீக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.