search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வெளி மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்தோர் தேர்தலில் வாக்களிக்க புதிய திட்டம்-  தேர்தல் ஆணையம் முடிவு
    X

    (கோப்பு படம்)

    வெளி மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்தோர் தேர்தலில் வாக்களிக்க புதிய திட்டம்- தேர்தல் ஆணையம் முடிவு

    • புலம் பெயர்ந்த வாக்காளர்கள், வாக்களிக்க சொந்த மாநிலத்துக்கு செல்ல தேவையில்லை.
    • தற்போது இருக்கும் இடத்தில் இருந்தே வாக்களிக்க திட்டம் வழிவகுக்கும் என கூறப்படுகிறது.

    கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 67.4 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. 30 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்யாதது கவலை அளிப்பதாக தேர்தல் ஆணையம் கருதுகிறது. இதை அடுத்து வாக்களிக்கும் உரிமையை சரிவர பயன்படுத்துவதற்கு ஏதுவாக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளது.

    அதன்படி பணி மற்றும் இதர காரணங்களுக்காக பல்வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து வசித்து வருவோர் தங்களது சொந்த மாநில தேர்தல்களில் வாக்களிக்க வகை செய்யும் எம்-3 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வரும் தேர்தலில் பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. இந்த நடைமுறை மூலம் புலம் பெயர்ந்த வாக்காளர்கள், வாக்குப்பதிவுக்காக தங்களது சொந்த மாநிலங்களுக்கு செல்லாமல் தற்போது இருக்கும் இடங்களில் இருந்தே தொலைதூர வாக்களிப்பு மின்னணு எந்திரங்கள் மூலம் வாக்களிக்க இந்த நடைமுறை வழிவகுக்கும் என கூறப்படுகிறது.

    இதற்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மாதிரியுடன் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கருத்து கேட்க, வரும் ஜனவரி 16-ந் தேதி ஆலோசனை கூட்டத்தை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது அங்கீகரிக்கப்பட்ட 8 தேசிய கட்சிகள், 57 மாநில கட்சிகளுக்கு இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவும் கலந்து கொண்டு எம்-3 மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்க உள்ளது.

    Next Story
    ×