search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன தலைவர் வீட்டில் பணமோசடி தொடர்பான சோதனை
    X

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன தலைவர் வீட்டில் பணமோசடி தொடர்பான சோதனை

    ஹீரோ மோட்டோகார்ப் உலகிலேயே அதிகமாக இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் இந்திய நிறுவனம்.

    இந்நிறுவனம் 2001-ம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தியாளராக ஆனது. விற்பனையில் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து அந்த முதல் இடத்தை அந்நிறுவனம் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

    இந்நிறுவனத்தின் தலைவர் பவன் முன்ஜால்.

    இன்று, பவன் முன்ஜாலுக்கு சொந்தமான புதுடெல்லியில் உள்ள ஒரு வீட்டிலும், குருகிராம் பகுதியில் அவருக்கு சொந்தமான இடங்களிலும் பண மோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அரசாங்கத்துக்கு முறைப்படி அறிவிக்காமல் வெளிநாட்டு பணத்தை எடுத்து சென்றதாக முன்ஜாலுக்கு நெருக்கமான நபர் மீது குற்றம் சாட்டப்பட்டு வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (Directorate of Revenue Intelligence) விசாரணை செய்தது.

    அதன் தொடர்ச்சியாக தற்போது முன்ஜாலின் டெல்லி வீட்டிலும், அவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றதாக தெரிகிறது.

    வரி ஏய்ப்பு விசாரணையின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சில இடங்களிலும், முன்ஜாலுக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×