search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தேர்தல் ஆணையம் அறிவுரை என்ற பெயரில் மிரட்டுகிறது- மல்லிகார்ஜூன கார்கே
    X

    தேர்தல் ஆணையம் அறிவுரை என்ற பெயரில் மிரட்டுகிறது- மல்லிகார்ஜூன கார்கே

    • தேர்தல் ஆணையம் பதிலளித்த நிலையில் கார்கே கருத்து தெரிவித்துள்ளார்.
    • தேர்தல் ஆணையம், கூட்டணி கட்சிகளுக்கு எழுதிய கடிதத்திற்கு பதிலளிப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

    தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் வலிமைக்காக காங்கிரஸ் குரல் கொடுக்கிறது என தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பதில் அளித்துள்ளார்.

    வாக்குப்பதிவு சதவீதத்தில் உள்ள முரண்பாடு குறித்து மல்லிகார்ஜூன கார்கே எழுதிய கடிதத்திற்கு தேர்தல் ஆணையம் பதிலளித்த நிலையில் கார்கே கருத்து தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், " காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தின் பக்கம் உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் யார் பக்கம் நிற்கின்றனர் என்பதை முடிவு செய்ய வேண்டும்.

    ஒரு பக்கம் குடிமக்களின் கேள்வி கேட்கும் உரிமையை மதிப்பதாக கூறும் தேர்தல் ஆணையம் மற்றொரு பக்கம் அறிவுரை என்ற பெயரில் மிரட்டுகிறது.

    தன்னுடைய கடிதம் கூட்டணிக் கட்சிகளுக்காக எழுதப்பட்டதே தவிர தேர்தல் ஆணையத்திற்காக எழுதப்படவில்லை.

    நேரடியாக கொடுக்கும் புகார்களையே நிராகரிக்கும் தேர்தல் ஆணையம், கூட்டணி கட்சிகளுக்கு எழுதிய கடிதத்திற்கு பதிலளிப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

    அரசியல் சாசனத்தின்படி நேர்மையான, நியாயமான முறையில் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் இருப்பதை தேர்தல் ஆணையம் உணர்ந்திருப்பது மகிழ்ச்சி" என்றார்.

    Next Story
    ×