search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பசுவை கடத்தினால் பார்த்த இடத்தில் என்கவுண்டர்.. கர்நாடக அமைச்சர் எச்சரிக்கை
    X

    பசுவை கடத்தினால் பார்த்த இடத்தில் என்கவுண்டர்.. கர்நாடக அமைச்சர் எச்சரிக்கை

    • கர்ப்பிணி பசு வதை நடந்ததையொட்டி எழுந்த சர்ச்சைக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்.
    • அது நாம் பாசத்துடனும் அன்புடனும் பார்க்கும் ஒரு விலங்கு.

    பசு கடத்தலில் ஈடுபடுபவர்களை பார்த்த இடத்திலேயே சுட்டுத் தள்ள போலீஸுக்கு உத்தரவிட உள்ளதாக கர்நாடக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    உத்தர கன்னடா மாவட்டத்தில் கால்நடை கடத்தல் மற்றும் பசு வதை அதிகரித்து வருவதைத் தடுக்க, கால்நடை கடத்தல்காரர்களுக்கு எதிராக கண்டதும் சுடும் உத்தரவை பிறப்பிக்க அரசாங்கம் தயாராக உள்ளது என மீன்வளத் துறை அமைச்சர் மங்கலா சுப்ப வைத்யா தெரிவித்துள்ளார்.

    சமீபத்தில் ஹொன்னாவர் அருகே கர்ப்பிணி பசு வதை நடந்ததையொட்டி எழுந்த சர்ச்சைக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

    உத்தர கன்னடா மாவட்டத்துக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் வைத்யா நேற்று செய்தியாளர் சந்திப்பின் போது பேசியதாவது, பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. பசு கடத்தல் நிறுத்தப்பட வேண்டும்.

    சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் கால்நடை கடத்தல்காரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை செயல்படுத்த நிர்வாகம் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. பசுக்களைப் பாதுகாக்க தேவைப்பட்டால் துப்பாக்கியை பயன்படுத்த காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது.

    நாம் தினமும் பசுவின் பால் குடிக்கிறோம். அது நாம் பாசத்துடனும் அன்புடனும் பார்க்கும் ஒரு விலங்கு. பசு கடத்தல் மற்றும் வதை தொடர்ந்தால் அத்தகைய செயல்களில் ஈடுபடுவோரை பார்த்த இடத்தில் சுட்டுக் தள்ள உத்தரவிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×