search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மும்பை பங்குச்சந்தை கடும் சரிவு: காலையிலேயே 7.37 லட்சம் கோடி ரூபாயை இழந்த முதலீட்டார்கள்
    X

    மும்பை பங்குச்சந்தை கடும் சரிவு: காலையிலேயே 7.37 லட்சம் கோடி ரூபாயை இழந்த முதலீட்டார்கள்

    • இன்று காலை 2 மணி நேரத்திற்குள் சென்செக்ஸ் 1,100-க்கு அதிக புள்ளிகள் சரிவு.
    • வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்தது சரிவுக்கு முக்கிய காரணம்.

    மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் சென்செக்ஸ் இன்று மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்து வர்த்தகம் ஆனதால் பங்கு முதலீட்டாளர்கள் சுமார் 7.37 லட்சம் கோடி ரூபாயை காலை 2 மணி நேரத்திற்குள் இழந்துள்ளனர்.

    மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் சென்செக்ஸ் இன்று காலை 9.15 மணிக்கு தொடங்கியதில் நேர் தலைகீழாக இறங்கிய வண்ணமாகவே இருந்தது.

    வெள்ளிக்கிழமை சிறப்பு வர்த்தகம் சென்செக்ஸ் 79724.12 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இன்று காலை 79713.14 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

    அதன்பின் தொடர்ந்து சரிவை சந்தித்தது. இன்று காலை 11.26 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 78.400.46 புள்ளிகளுடடன் வர்த்தகம் ஆகியது. சுமார் 1323.66 புள்ளிகள் சரிவை சந்தித்தது.

    இதனைத் தொடர்ந்து 7.37 கோடி ரூபாய் அளவிற்கு பங்கு முதலீட்டாளர்கள் இழப்பை சந்தித்துள்ளனர். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் வெளிநாட்டு முதலீட்டார்கள் தங்களுடைய பங்குகளை தடையின்றி விற்பனை செய்ததும், மெரிக்க அதிபர் தேர்தல் மற்றும் அடுத்த வாரம் அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் குறித்து முடிவு எடுக்க இருப்பது ஆகிய காரணிகள் இந்த வீழ்ச்சிக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

    சன் ஃபார்மா, என்.டி.பி.சி., ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், அதானி போர்ட்ஸ், பவர் கிரிட், டாடா மோட்டார்ஸ், டைடன் மற்றும் டாடா ஸ்டீல் போன்றவை மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது.

    அதேவேளையில் மகிந்திரா அண்டு மகிந்திரா, டெக் மகிந்திரா, ஹெ.சி.எல். டெக்னாலாஜிஸ் மற்றும் இந்தூஸ் இண்ட் பேங்க் பங்குகள் உயர்வை சந்தித்துள்ளன. வெளிநா்டு நிறுவன முதலீட்டாளர்கள் சுமார் 211.93 கோடி ரூபாய் அளவில் கடந்த வெள்ளிக்கிழமை பங்குகளை விற்றனர். அக்டோபர் மாதம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 94 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பங்குகளை விற்றுள்ளனர்.

    Next Story
    ×