என் மலர்
இந்தியா
இ.வி.எம். முறைகேட்டை அப்புறம் பாத்துக்கலாம்.. மகா. சட்டசபையில் பதவியேற்ற எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள்
- சட்டப்பேரவையின் சிறப்பு மூன்று நாள் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது
- இடைக்கால சபாநாயகர் காளிதாஸ் கோலம்ப்கர் முன்னிலையில் எம்எல்ஏக்களாக பதவி ஏற்றனர்.
புதிதாக அமைக்கப்பட்ட மகாராஷ்டிர சட்டசபையில் எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாடி (எம்.வி.ஏ) உறுப்பினர்கள் இன்று [ஞாயிற்றுக்கிழமை] எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்றனர்.
கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி நேற்று நடந்த பதவியேற்பை எம்.வி.ஏ உறுப்பினர்கள் புறக்கணித்த நிலையில் இன்று பதவியேற்புக்கு இணங்கி உள்ளனர்.
பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான புதிய அரசு அமைந்த பின்னர் சட்டப்பேரவையின் சிறப்பு மூன்று நாள் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல்வர் பட்னாவிஸ், துணை முதல்வர்கள் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோரும் மகாயுதி உறுப்பினர்களும் நேற்று இடைக்கால சபாநாயகர் காளிதாஸ் கோலம்ப்கர் முன்னிலையில் எம்எல்ஏக்களாக பதவி ஏற்றனர்.
இந்நிலையில் இன்று காங்கிரஸின் நானா படோல், விஜய் வடேட்டிவார் மற்றும் அமித் தேஷ்முக், என்சிபி (எஸ்பி) தலைவர் ஜிதேந்திர அவ்ஹாத் மற்றும் சிவசேனாவின் ஆதித்யா தாக்கரே உள்ளிட்ட எம்விஏ உறுப்பினர்கள் இன்று அவை மீண்டும் கூடியவுடன் பதவியேற்றனர். தொடர்ந்து சபாநாயகர் தேர்வுக்கான வாக்கெடுப்பு நடைபெறும் என்று தெரிகிறது.