search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்ற வண்ண புகை குண்டு தாக்குதல்: கர்நாடக மாநில முன்னாள் போலீஸ் அதிகாரி மகன் கைது
    X

    பாராளுமன்ற வண்ண புகை குண்டு தாக்குதல்: கர்நாடக மாநில முன்னாள் போலீஸ் அதிகாரி மகன் கைது

    • பாராளுமன்ற மக்களவையில் இருவர் வண்ண புகை குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர்.
    • இது தொடர்பாக இதுவரை ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    பாராளுமன்ற மக்களவை பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து மக்களவை எம்.பி.க்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்குள் இருவர் குதித்து வண்ண புகை குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். அதேபோல் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் இருவர் புகை குண்டுகள் வீசினார்.

    இந்த நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு மூளையாக செய்யப்பட்டவர் கைது செய்யப்பட்டார். மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து டெல்லி போலீசின் சிறப்பு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. சதித்திட்டம் தீட்டியது குறித்து வாட்ஸ்அப், சமூக வலைத்தள உரையாடல்கள் உள்ளிட்டவைகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் உயர் போலீஸ் அதிகாரியின் மகனை இந்த வழக்க தொடர்பாக போலீசார் பாகல்கோட்டில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவரை டெல்லி அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கைது செய்யப்பட்டவர் மக்களவையில் தாக்கப்பட்ட டி. மனோ ரஞ்சனின் நண்பர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் பொறியியல் கல்லூரியில் ஒன்றாக படித்துள்ளனர்.

    வீட்டில் இருந்து வேலைப் பார்த்துக் கொண்டிருந்த எனது சகோதரர் எந்த தவறும் செய்யவில்லை என அவரது சகோதரி தெரிவித்துள்ளார். மேலும், டெல்லி போலீசார் வீட்டிற்கு வந்தது உண்மை. எனது சகோதரரிடம் விசாரணை நடத்தினர். நாங்கள் அவர்களுக்கு ஒத்துழைப்ப வழங்கினோம். எனது சகோதரரும் மனோரஞ்சனும் ஒரே அறையில் தங்கியிருந்தனர். தற்போது எனது சகோதரர் வீட்டில் இருந்து வேலை செய்து வருகிறார்" என்றார்.

    Next Story
    ×