என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கேமியோ கதாபாத்திரங்கள் குறித்து சல்மான் பரபரப்பு கருத்து
- பதானில் சல்மானும், டைகர்-3 படத்தில் ஷாருக்கும் கேமியோ செய்திருந்தனர்
- இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டுள்ளோம் என்றார் சல்மான்
மும்பை திரையுலகின் முன்னணி கதாநாயகர்கள் ஆமிர் கான், சல்மான் கான் மற்றும் ஷாருக் கான். இந்த 3 நாயகர்கள் நடித்த திரைப்படங்கள் வெளியாகும் நாட்களில் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பது வழக்கம்.
அகில இந்திய அளவில் மட்டுமின்றி உலகளவில் இவர்களின் திரைப்படங்கள் பல திரையரங்குகளில் வெளியாவதால் அவற்றின் வர்த்தக எல்லையும் பரந்து விரிந்துள்ளது. இதன் காரணமாக இவர்களை வைத்து படம் இயக்கும் இயக்குனர்கள், இத்திரைப்படங்களில் ரசிகர்கள் விரும்பும் அம்சங்கள் அனைத்தையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு புகுத்த நினைக்கின்றனர்.
அதில் ஒன்றாக சமீப காலங்களாக சல்மான் கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படங்களில் ஷாருக் கானும், ஷாருக் கான் கதாநாயகானாக நடிக்கும் திரைப்படங்களில் சல்மான் கானும், சில நிமிடங்களே திரையில் தோன்றும் கேமியோ (cameo) காட்சியில் தோன்றுகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் வெளியான ஷாருக் கான் நடித்து திரைக்கு வந்த "பதான்" திரைப்படத்தில் சல்மான் கான் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதே போல், நவம்பர் மாதம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் சல்மான் கான் நடித்த "டைகர்-3" திரைப்படத்தில் ஷாருக் கான் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஒரு முன்னணி கதாநாயகனின் திரைப்படத்தில் திரையில் வேறொரு முன்னணி கதாநாயகன் தோன்றுவது இரு தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து சல்மான் கான் கூறியதாவது:
நானும் ஷாருக் கானும் பரஸ்பரம் இருவர் படங்களிலும் கேமியோ வேடங்கள் செய்கிறோம். எங்கள் இருவரின் ரசிகர்களும் அதை விரும்புவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் இருவருக்கும் திரையை தாண்டியும் ஆழமான நட்பு உள்ளது; இது கூடுதல் உற்சாகத்தை அளிக்கிறது. எங்கள் இரு தரப்பு ரசிகர்களுக்கும் இடையே அவ்வப்போது சமூக வலைதளங்களில் சச்சரவு நடைபெறுவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஏனென்றால், நான் சமூக வலைதளங்களை அதிகம் பார்ப்பவன் இல்லை. ஆனால், நான் எப்பொழுதும் என் ரசிகர்களிடம் சொல்வது என்னவென்றால், ஷாருக் எனக்கு சகோதரன்; எனவே, உங்களுக்கும் சகோதரன் - அவருக்கு எந்த தீங்கும் நேர்ந்து விட கூடாது - என்பதுதான். நானும் ஷாருக்கும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டுள்ளோம்.
இவ்வாறு சல்மான் தெரிவித்தார்.
பிரபல கதாநாயகர்கள், வேறொரு கதாநாயகரின் திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் வருவது திரைப்படங்களின் வெற்றிக்கும், அதிக வசூலுக்கும் உதவுவதாக திரைப்பட விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்