என் மலர்
இந்தியா
பிறந்து 10 நாளே ஆன குழந்தையை விற்று புது பைக் வாங்கிய தந்தை
- குழந்தை இல்லாத தம்பதிக்கு இரண்டு இடைத்தரகர்கள் மூலம் விற்றார்
- புது பைக்குடன் தர்மு சுற்றித்திரிவதைப் பார்த்த உள்ளூர் மக்கள் சந்தேகமடைந்தனர்.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பாஸ்தா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹத்மாத் கிராமதத்தை சேர்ந்தவர் தர்மு பெஹெரா. இவரது இரண்டாவது மனைவி சாந்தி பெஹரா.
பிரசவத்திற்காக டிசம்பர் 19 அன்று பரிபாடாவில் உள்ள பிஆர்எம் மருத்துவக் கல்லூரியில் சாந்தியை சேர்த்தார், அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவர் டிசம்பர் 22 முதல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
பின்னர் பிறந்த 10 நாளே ஆன தனது மகனை தர்மு, மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள உடாலா சப்-டிவிஷனுக்கு உட்பட்ட சைன்குலாவைச் சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதிக்கு இரண்டு இடைத்தரகர்கள் மூலம் விற்று, அந்த பணத்தை வைத்து இஎம்ஐயில் பைக் வாங்கியுள்ளார்.
புது பைக்குடன் தர்மு சுற்றித்திரிவதைப் பார்த்த கிராம மக்கள் சந்தேகமடைந்து குழந்தைகள் நலக் குழுவுக்கு (CWC) தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.தர்மு மற்றும் சாந்தி மற்றும் குழந்தையை வாங்கிய தம்பதியினரை CWC விசாரணைக்கு அழைத்தது.
உரிய நீதிமன்ற ஆவணத்தின் மூலம் சட்டப்படிதான் குழந்தையை தானம் செய்ததாக தம்பதியினர் கூறினர். இருப்பினும் பைக் வாங்க குழந்தையை விற்ற அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.