என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ராஜ்தானி, சதாப்தி உள்ளிட்ட ரெயில்கள் 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமானால் இலவச உணவு
- இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) கடந்த 1999-ம் ஆண்டு நிறுவப்பட்டது.
- பயணிகள் உணவை கேட்டுப் பெறலாம். சைவமா? அசைவமா? என்பது பயணிகள் தேர்வு செய்து கொள்ளலாம்.
அதிவிரைவு ரெயில்கள் புறப்படுவதற்கு 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமானால், பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. இந்திய ரெயில்வே பயணிகளுக்கான சேவைகளை மேம்படுத்த தொடர்ந்து முயற்சி செய்யப்பட்டு வருகிறது. எனினும் இயற்கை மற்றும் தொழில்நுட்பக் கோளாறு காரணங்களால் ரெயில்களை இயக்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இதுபோன்ற சூழலில் பயணிகளின் சிரமத்தை தவிர்க்க சில வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
குறிப்பாக ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ உள்ளிட்ட அதிவிரைவு ரெயில்கள் புறப்படுவதில் எந்தக் காரணத்துக்காகவும் 2 மணி நேரத்துக்கு மேல் தாமதம் ஆனால் பயணிகளுக்கு உணவு இலவசமாக வழங்க வேண்டும் என்பது ரெயில்வே விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. இதன்படி பயணிகள் உணவை கேட்டுப் பெறலாம். சைவமா? அசைவமா? என்பது பயணிகள் தேர்வு செய்து கொள்ளலாம். இதுபோல சிற்றுண்டியா? சாப்பாடா? என்பதையும் அவர்களே தேர்வு செய்யலாம்.
இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) கடந்த 1999-ம் ஆண்டு நிறுவப்பட்டது. தரமான உணவை தயாரித்து வழங்க ஏதுவாக அவ்வப்போது கட்டமைப்பை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐ.ஆர்.சி.டி.சி. தனது சமையலறையை மேம்படுத்த உள்ளது.