search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சுகாதார அமைச்சகத்தின் முன் இலவச சிகிச்சை.. டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் நூதன போராட்டம்
    X

    சுகாதார அமைச்சகத்தின் முன் இலவச சிகிச்சை.. டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் நூதன போராட்டம்

    • AIIMS RDA மருத்துவர்கள் மத்திய சுகாதார அமைச்சகம் அமைந்துள்ள நிர்மான் பவன் வளாகத்துக்கு வெளியே இன்று போராட்டத்தில் ஈடுபடுகிறனர்.
    • பிரதமர் மோடிக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

    கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. மருத்துவ ஊழியர் சஞ்சய் சிங் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டு மேற்கு வங்காள போலீசால் கைது செய்யப்பட்டார். இதனைதொடர்ந்து வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்டது.

    இந்த விவாகரத்தின் விரைவான நீதி வழங்க வேண்டியும் வருங்காலங்களில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் மருத்துவர்கள் நடத்தி வரும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. அந்த வகையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த ரெசிடெண்ட் டாக்டர்ஸ் அசோசியேசன் [AIIMS RDA] மருத்துவர்கள் மத்திய சுகாதார அமைச்சகம் அமைந்துள்ள நிர்மான் பவன் வளாகத்துக்கு வெளியே இன்று போராட்டத்தில் ஈடுபடுகிறனர். நிர்மான் பவனுக்கு வெளியே வீதியில் வெளி நோயாளிகளுக்கு [OPD] இலவச சிகிச்சை வழங்கி நூதன முறையில் மருத்துவர்கள் போரட்டம் நடந்த உள்ளனர்.

    ரெசிடெண்ட் டாக்டர்ஸ் அசோசியேசன்[RDA] மருத்துவர்கள் கடந்த ஆகஸ்ட் 12 முதலே காலவரையின்றி போராட்டம் நடத்தி வரும் நிலையில் மருத்துவ சேவைகள் பாதிப்புக்களாகியிருந்தது. எனவே தற்போது தங்களின் போராட்ட முறையை மருத்துவர்கள் மாற்றியுள்ளனர். மேலும் AIIMS RDA சங்கம் சார்பில், பிரதமர் மோடிக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×