என் மலர்
இந்தியா
நேரு முதல் ராஜீவ் காந்தி வரை இட ஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்தவர்கள்- பிரதமர் மோடி
- காங்கிரஸ் கட்சி கடந்த 75 ஆண்டுகளில் அரசியலமைப்பு 60 முறை மாற்றியுள்ளது.
- எமர்ஜென்சி காலத்தில் மக்களின் உரிமைகளை பிறத்தார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி.
மக்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அரசியல் சாசனத்தை மாற்றுவதற்கு, அவரச சட்டத்தை காங்கிரஸ் கொண்டு வந்தது. அரசியல் சாசனத்தை காங்கிரஸ் கட்சியை போல அழித்தது வேறு யாரும் அல்ல.
1976ல் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியபோது அந்த தீர்ப்பை மாற்றியவர் இந்திரா காந்தி. காங்கிரஸ் கட்சி கடந்த 75 ஆண்டுகளில் அரசியலமைப்பு 60 முறை மாற்றியுள்ளது.
எமர்ஜென்சி காலத்தில் மக்களின் உரிமைகளை பிறத்தார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. நீதிமன்றம் இந்திரா காந்தியின் எம்பி பதவியை பறித்ததால், கோபத்தில் நாட்டில் எமர்ஜென்சியை கொண்டு வந்தார்.
தன்னுடைய நாற்காலியை காப்பாற்றிக் கொள்ளவே இந்திரா காந்தி எமர்ஜென்சியை கொண்டு வந்தார். நேரு விதைத்த விஷ விதைக்கு, தண்ணீர் ஊற்றி வளர்த்தவர் இந்திரா காந்தி. அரசியல் சாசனத்தை காரணம் காட்சி சிலர் தங்களது தோல்வியை மறைக்க பார்க்கின்றனர்.
தனது பதவி பறிப்பதற்கு காரணமானவர்களை எமர்ஜென்சி மூலமாக பழி வாங்கினார் இந்திரா காந்தி.
தனது வெற்றி செல்லாது என அறிவித்த நீதிபதி கண்ணாவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வர இந்திரா காந்தி அனுமதிக்கவில்லை.
அமைச்சரவை முடிவெடுத்த ஒரு அரசியல் மசோதாவை, ஒரு சாதாரண எம்.பி ஊடகத்தினர் முன்னிலையில் கிழித்தெறிந்தார்.
2015ம் ஆணடு எங்களுடைய ஆட்சி வந்த பிறகு தான் அம்பேத்கர் சர்வதேச மையம் கொண்டு வரப்பட்டது. அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது கூட காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத போதுதான் வழங்கப்பட்டது.
நேரு முதல் ராஜீவ் காந்தி வரை இட ஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்தவர்கள். இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து மிக நீண்ட கடிதங்களை எழுதியவர் முன்னாள் பிரதமர் நேரு.
நாடாளுமன்றத்திலும் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பேசியவர்கள் காங்கிரஸ் கட்சியினர். வாக்கு வங்கி அரசியலுக்காக பட்டியலின, பழங்குடியின மக்களை காங்கிரஸ் வஞ்சித்தது.
மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து நாடாளுமன்றத்தில் மிக நீண்ட விவாகதங்களை நடத்தினார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் மோடியின் உரை இடையே, காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.