search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    Gauri Lankesh murder accused
    X

    ஜாமினில் வந்த கௌரி லங்கேஷ் கொலை குற்றவாளி ஷிண்டே சிவசேனாவில் இருந்து நீக்கம்

    • கௌரி லங்கேஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
    • கௌரி லங்கேஷ் கொலை குற்றவாளிகளுள் ஒருவனான ஸ்ரீகாந்த் ஷிண்டே சிவசேனா கட்சியில் சேர்ந்தார்.

    பிரதமர் மோடி மற்றும் பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளைக் கடுமையாக விமர்சித்து வந்த கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    இதற்கிடையில் இந்தக் கொலையில் தொடர்புடைய மோகன் நாயக் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகளாக சிறையில் இருந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முக்கிய குற்றவாளி மோகன் நாயக்கிற்கு ஜாமின் வழங்கப்பட்டது. தெடர்ந்து மற்ற குற்றவாளிகளும் அடுத்தடுத்து ஜாமினில் வெளியே வந்தனர். கடைசியாகக் கடந்த அக்டோபர் 11 அன்று ஜாமினில் வெளிவந்த இருவருக்கு இந்து அமைப்பினரால் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் கௌரி லங்கேஷ் கொலை குற்றவாளிகளுள் ஒருவனான ஸ்ரீகாந்த் பங்கார்கர் என்பவர் மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணியில் முதல்வர் ஷிண்டே சிவசேனா கட்சியில் சேர்ந்தார்.

    மகாராஷ்டிராவை சேர்நத ஸ்ரீகாந்த் கடந்த 2001 முதல் 2018 வரை அப்போதைய ஒருங்கிணைத்த சிவசேனாவில் ஜால்னா தொகுதி முனிசிபல் கவுன்சிலராக இருந்துள்ளார். 2011 ஆம் ஆண்டில் சீட் மறுக்கப்பட்டதால் சிவசேனாவின் இருந்து வெளியேறி வலதுசாரி அமைப்பான இந்து ஜன்ஜாக்ருதி சமிதி அமைப்பில் ஐக்கியமாகியுள்ளார். தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 2018 ஆம் ஆண்டு கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.

    கடந்த செப்டம்பரில் கடந்த செப்டம்பர் 4 அன்று ஜாமீனில் வந்த அவர் தற்போது ஷிண்டே சிவசேனா தலைவர் முன்னாள் அமைச்சர் அர்ஜுன் கோத்கர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். தொடர்ந்து ஜால்னா சட்டமன்றத் தொகுதியில் பிரசார தலைவராக அர்ஜுன் நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில், சிவசேனா கட்சியின் தேர்தல் பிரச்சாரப் பொறுப்பாளராக ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டதை மகாராஷ்டிர முதல்வர் ஏகாந்த் ஷிண்டே ரத்து செய்தார்.

    ஜல்னா மாவட்டத்தில் சிவசேனா கட்சி சார்பாக பிறப்பிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளும் செல்லாது என்று காந்த் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×