search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மகாராஷ்டிராவில் வேகமெடுக்கும் GBS.. நோய் பாதிப்பு 205 ஆக உயர்வு - 8 பேர் உயிரிழப்பு
    X

    மகாராஷ்டிராவில் வேகமெடுக்கும் GBS.. நோய் பாதிப்பு 205 ஆக உயர்வு - 8 பேர் உயிரிழப்பு

    • கை, கால்கள் மரத்துப் போதல், நீடித்த வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை அறிகுறிகளாகும்
    • மும்பையில் GBS நோயால் 53 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

    மகாராஷ்டிரா மாநிலம் புனே, மும்பை சுற்றுவட்டார பகுதிகளில் குய்லின்-பாரே சிண்ட்ரோம்(GBS) என்ற நரம்பியல் கோளாறு கடந்த மாதம் முதல் பரவி வருகிறது. இந்த நோய் மனிதர்களின் மூளை மற்றும் முதுகெலும்புக்கு வெளியே உள்ள நரம்புகளைத் தாக்கும்.

    கை, கால்கள் மரத்துப் போதல், நீடித்த வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை அறிகுறிகளாகும். இந்த நோய் பாதிப்பு பாக்டீரியா, வைரஸ் தாக்கத்தால் ஏற்படுகிறது. அறிகுறிகள் தெரிந்தவுடன் நரம்பியல் டாக்டரை அணுக அறிவுறுத்தப்பட்டது.

    இந்நிலையில் நோய் பாதிப்பு 205 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் தற்போது மேலும் இரண்டு பேருக்கு GBS நோய் கண்டறியப்ப்டுள்ளது என்றும் சந்தேகிக்கப்படும் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட GBS பாதிப்புகளின் எண்ணிக்கை 205 ஐ எட்டியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும், மாநிலத்தில் GBS நோய் காரணமாக இதுவரை 8 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. சமீபத்தில் மும்பையில் GBS நோயால் 53 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். GBS காரணமாக மும்பையில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இதுவாகும். எனவே மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.

    Next Story
    ×