search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்து மக்கள் தொகை சரிவுக்கு காங்கிரஸ்தான் காரணம்: மத்திய மந்திரி கிரிராஜ் சிங் குற்றச்சாட்டு
    X

    இந்து மக்கள் தொகை சரிவுக்கு காங்கிரஸ்தான் காரணம்: மத்திய மந்திரி கிரிராஜ் சிங் குற்றச்சாட்டு

    • இந்தியாவில் 1950 முதல் 2015 காலகட்டத்தில் இந்துக்களின் எண்ணிக்கை 7.82 சதவீதம் குறைந்துள்ளது.
    • அதேவேளையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது.

    1950 முதல் 2015 காலக்கட்டத்தில் இந்தியாவில் இந்து மக்கள் சரிந்துள்ளதாகவும், முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாகவும் புள்ளி விவரம் ஒன்று தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கூறியதாவது:-

    இந்து மக்கள் தொகை குறைந்துள்ளது. முஸ்லிம் மக்கள் தொகை உயர்ந்துள்ளது. இதற்கு காங்கிரசின் திருப்திப்படுத்தும் அரசியலே காரணம். இந்தியாவில் 1950 முதல் 2015 காலகட்டத்தில் இந்துக்களின் எண்ணிக்கை 7.82 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது 84.68 சதவீதத்தில் இருந்து 78.06 சதவீதமாக குறைந்துள்ளது.

    ஆனால் முஸ்லிம் மக்கள் தொகை 14.09 சதவீதம் அதிகரித்துள்ளது. 1950-ல் 9.84 சதவீதமாக இருந்தது. தற்போது 17.09 சதவீதம் அதிகரித்துள்ளது. இது 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது.

    இது அனைத்தும் காங்கிரஸ் கட்சி திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டதால் நடந்துள்ளது. காங்கிரசும், அதன் கூட்டணிக் கட்சிகளும் தங்களின் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற விரும்புகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    1950-ல் கிறிஸ்தவ மக்கள் தொகை 2.24 சதவீதமாக இருந்த நிலையில், 2015-ல் 2.36 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 5.38 சதவீதம் உயர்வாகும். ஜெயின் சமூகத்தினர் தொகை 1950-ல் 0.45 சதவீதமாக இருந்தது. 2015-ல் 0.36 சதவீதமாக குறைந்துள்ளது.

    சீக்கிய சமூகத்தினர் 1950-ல் 1.24 சதவீதம் இருந்தனர். 2015-ல் 1.85 சதவீதமாக அதிகரித்துள்ளனர். இது 6.58 சதவீதம் உயர்வாகும். பார்சி சமூகத்தினர் 1950-ல் 0.03 சதவீதம் இருந்தனர். 2015-ல் 85 சதவீதம் குறைந்து 0.004 சதவீதமாக குறைந்துள்ளனர்.

    Next Story
    ×