search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஞானவாபியே அந்த கடவுள் விஸ்வநாதர்தான்.. மசூதி சர்ச்சையை மீண்டும் தூண்டும் யோகி ஆதித்யநாத்
    X

    ஞானவாபியே அந்த கடவுள் விஸ்வநாதர்தான்.. மசூதி சர்ச்சையை மீண்டும் தூண்டும் யோகி ஆதித்யநாத்

    • கள ஆய்வின்போது, மசூதி வளாகத்தில் உள்ள ஒரு தொட்டிக்குள் சிவலிங்கம் இருப்பதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
    • மசூதி பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தத் தடை விதிக்க கோரி இந்து அமைப்புகள் அளித்த மனுவை நேற்றைய தினம் வாரணாசி கோர்டு தள்ளுபடி செய்தது.

    உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் அருகே ஞானவாபி மசூதி இருக்கிறது. அங்கிருந்த கோவிலை இடித்துவிட்டு முகலாய மன்னர்களால் மசூதி கட்டப்பட்டதாகக் சமீப காலமாக இந்து அமைப்புகள் கூறிவருகின்றன. மசூதியில் இந்துக்கள் வழிபாடு நடந்த தொடரப்பட்ட வழக்கை விசாரித்து மசூதிக்குள் கள ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் ஆய்வுத் துறைக்கு வாரணாசி கோர்ட்டு உத்தரவிட்டது.

    கள ஆய்வின்போது, மசூதி வளாகத்தில் உள்ள ஒரு தொட்டிக்குள் சிவலிங்கம் இருப்பதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் ஞானவாபி மசூதி வளாகத்தில் தரையின்கீழ் தளத்தில் உள்ள சீல் வைக்கப்பட்ட பகுதிக்குள் சென்று இந்துக்கள் வழிபட வாரணாசி மாவட்ட கோர்ட்டு அனுமதி வழங்கியிருந்தது. இதை எதிர்த்து மசூதி தரப்பில் உச்ணெதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இந்நிலையில் மசூதி பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தத் தடை விதிக்க கோரி இந்து அமைப்புகள் அளித்த மனுவையும் நேற்றைய தினம் வாரணாசி கோர்டு தள்ளுபடி செய்தது. மனு தள்ளுபடி செய்யப்பட்டதைக் கண்டிக்கும் விதமாக பாஜகவை சேர்ந்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

    கோரக்பூரில் நடத்த கருத்தரங்கு ஒன்றில் சிவனின் வடிவமான விஷ்வநாதர் தோன்றிய முன் கதையை கூறிய அவர், ஞானவாபி என்பதே கடவுள் விஸ்வநாதர்தான், ஆனால் துரதிஷ்டவசமாக அதை மக்கள் மசூதி என்று அழைக்கின்றனர். இஸ்லாமியர்கள் இந்த வரலாற்று தவறை திருத்திக்கொள்ள வேண்டும். ஞானவாபியின் சுவர்கள் உரத்து கதறுகின்றன. ஞானவாபிக்குள் ஜோதிலிங்கமும் கடவுளர்களின் சிலைகளும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×