search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வேட்டி கட்டிய முதியவருக்கு அனுமதி மறுத்த ஷாப்பிங் மாலுக்கு  சீல் -  அரசு அதிரடி
    X

    வேட்டி கட்டிய முதியவருக்கு அனுமதி மறுத்த ஷாப்பிங் மாலுக்கு சீல் - அரசு அதிரடி

    • வேட்டி கட்டிய அந்த முதியவர் படம் பார்ப்பதற்காக அந்த மாலுக்கு வந்துள்ளார்.
    • 'தனி மனித கண்ணியத்துக்கும், சுயமரியாதைக்கும் இழுக்கு ஏற்படுவதை அரசு பொறுத்துக்கொண்டிருக்காது'

    கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள GT ஷாப்பிங் மாலுக்கு கடந்த செய்வாய்க்கிழமை இரவு வேட்டி கட்டி வந்த முதியவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி கண்டனங்களை குவித்து வருகிறது.

    வேட்டி கட்டிய அந்த முதியவர் படம் பார்ப்பதற்காக அந்த மாலுக்கு வந்துள்ளார்.மாலுக்குள் நுழையும் போது வேட்டி கட்டியவர்களுக்கு அனுமதி இல்லை,பேன்ட் மாற்றிக்கொண்டு வந்தால் அனுமாகிக்கிறோம் என மால் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

    முதியவரிடம் ப்ரீ புக்கிங் செய்யப்பட்ட பட டிக்கெட் இருந்தும், வேட்டியை அனுமதிக்கக்கூடாது என்பது தங்களது மாலின் கொள்கைகளில் ஒன்று என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த முதியவர் விவசாயி என பின்னர் தெரியவந்தது.

    இந்நிலையில் இந்த சம்பவம் சர்ச்சையான நிலையில் GT ஷாப்பிங் மாலுக்கு 7 நாட்களுக்கு மூடி சீல் வைக்க கர்நாடக அரசு நேற்று [ஜூலை 18] உத்தரவிட்டுள்ளது. விவசாயிக்கு ஏற்பட்ட இந்த அவமரியாதையை வன்மையாக கண்டிப்பதாகவும் தனி மனித கண்ணியத்துக்கும், சுயமரியாதைக்கும் இழுக்கு ஏற்படுவதை அரசு பொறுத்துக்கொண்டிருக்காது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்துக்கு அம்மாநில அரசியல் தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×