search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை தினமாக கடைபிடிக்கப்படும்: மத்திய அரசு
    X

    ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை தினமாக கடைபிடிக்கப்படும்: மத்திய அரசு

    • இந்திரா காந்தி 1975-ம் ஆண்டு ஜூன் 25-ந்தேதி எமர்ஜென்சியை அறிவித்தார்.
    • அன்றைய தினத்தை அரசியல் சாசன படுகொலை தினமாக கடைபிடிக்க மத்திய அரசு முடிவு.

    இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி அவசர நிலை (எமர்ஜென்சி) பிரகடனம் செய்தார். அப்போது அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பத்திரிகைகளின் குரல் ஒடுக்கப்பட்டது. இந்தியாவின் கருப்பு நாள் என எதிர்க்கட்சிகள் எமர்ஜென்சியை குறிப்பிடுவாரக்ள்.

    இந்த நிலையில் ஜூலை 25-ந்தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக கடைபிடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக உள்துறை மந்திரி அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் "1975-ம் ஆண்டு ஜூன் 25-ந்தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஒரு சர்வாதிகார மனநிலையில் தேசத்தின் மீது அவசர நிலையை விதித்து, நமது ஜனநாயகத்தின் ஆன்மாவின் கழுத்தை நெரித்தார். மற்றும் ஊடகங்களின் குரல் அடக்கப்பட்டது.

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25-ம் தேதியை சம்விதான் ஹத்யா திவாஸ் (அரசியல் சாசன படுகொலை தினம்) என்று அனுசரிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நாள் 1975 அவசரநிலையின் மனிதாபிமானமற்ற வலிகளைத் தாங்கிய அனைவரின் மகத்தான பங்களிப்பை நினைவுகூரும் என்று தெரிவித்துள்ளார்.

    மக்களவை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பாஜக அரசியலமைப்பு அழிக்க முயற்சி செய்வதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×