search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    கேரளாவில் கவர்னர் ஆரிப் முகமது கானின் விமான பயண செலவுக்கு கூடுதலாக ரூ.30 லட்சம் ஒதுக்கீடு
    X

    கேரளாவில் கவர்னர் ஆரிப் முகமது கானின் விமான பயண செலவுக்கு கூடுதலாக ரூ.30 லட்சம் ஒதுக்கீடு

    • கவர்னரின் விமான பயணத்திற்கான நிதியை மாநில அரசே வழங்க வேண்டும்.
    • கவர்னரின் விமான பயணத்திற்கு இந்த நிதி ஆண்டில் ரூ.30 லட்சம் ஒதுக்குமாறு நிதி துறை அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும், மாநில அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

    இந்த நிலையில் கவர்னரின் விமான பயணத்திற்கான நிதியை மாநில அரசே வழங்க வேண்டும். கடந்த நிதி ஆண்டில் இதற்காக மாநில அரசு ரூ.11.8 லட்சம் நிதி ஒதுக்கி இருந்தது.

    இந்த நிதி செலவாகி விட்டதாகவும், இதில் இன்னும் ரூ.1.15 லட்சம் மட்டுமே மீதி இருப்பதாகவும் கவர்னர் மாளிகை அதிகாரிகள் அரசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஆனால் கேரள நிதித்துறை இதுதொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை. மேலும் கவர்னரின் பயண செலவுக்கான நிதியை விடுவிக்காமல் இருந்தது.

    கேரளாவில் குடியரசு தின நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பினராயி விஜயன் பங்கேற்க வந்தபோது இதுபற்றி கவர்னர் ஆரிப் முகமது கான் அவரிடம் தெரிவித்தார். மேலும் விமான பயணத்திற்கு வரும் நிதி ஆண்டில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் எனவும் கோரி இருந்தார்.

    இதையடுத்து கவர்னரின் விமான பயணத்திற்கு இந்த நிதி ஆண்டில் ரூ.30 லட்சம் ஒதுக்குமாறு நிதி துறை அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்தார்.

    இதனை தொடர்ந்து நிதித்துறை கவர்னர் ஆரிப் முகமது கானின் விமான பயண செலவுக்கு ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.

    Next Story
    ×