search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    Abhishek Singhvi
    X

    கவர்னர் பதவி ஒழிக்கப்பட வேண்டும் - காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் சிங்வி

    • வரம்பு மீறாமல், தவறு செய்யாத ஒருவரை கவர்னராக நியமிக்க வேண்டும்.
    • ஒருமித்த கருத்துடன், அற்ப அரசியலில் ஈடுபடாத ஒருவரை கவர்னராக நியமிக்க வேண்டும்.

    கவர்னர் பதவி ஒழிக்கப்பட வேண்டும் அல்லது, அற்ப அரசியலில் ஈடுபடாத ஒருவரை, ஒருமித்த கருத்துடன் நியமிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.

    கடந்த வாரம் தெலுங்கானாவில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட அபிஷேக் மனு சிங்வி பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.

    அப்போது பேசிய அவர், "இந்த அரசாங்கத்தின் மிகப் பெரிய தோல்வி என்னவென்றால், அது ஒவ்வொரு நிறுவனத்தையும் இழிவுபடுத்தி, மதிப்பை குறைத்துள்ளது.

    கவர்னர்கள் இரண்டாவது தலைமை நிர்வாகியாக அல்லது ஒரே உறையில் இரண்டு கத்தியாக செயல்படும் நிகழ்வுகள் பல நடந்துள்ளன. கவர்னர் பதவியை அகற்ற வேண்டும் அல்லது ஒருமித்த கருத்துடன், அற்ப அரசியலில் ஈடுபடாத ஒருவரை கவர்னராக நியமிக்க வேண்டும். வரம்பு மீறாமல், தவறு செய்யாத ஒருவரை கவர்னராக நியமிக்க வேண்டும். அல்லது ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும்.

    கவர்னராக இருப்பவர் முதலமைச்சருக்கு சவாலாகவோ, அச்சுறுத்தலாகவோ இருந்தால் கீழே இறங்க வேண்டியது கவர்னர்தான் . ஏனென்றால், முதலமைச்சர் யார்? என்பதற்குத்தான் தேர்தல் நடக்கிறது. கவர்னர் யார்? என்பதற்கு அல்ல

    இறுதியில் நீதிமன்றத்திற்குச் சென்று மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என நீதிமன்றம் கூறும்போது, அதை ஜனாதிபதிக்கு அனுப்புங்கள் என கவர்னர் கூறுகிறார். ஆட்சி பாதிக்கப்படுகிறது. முடிவுகளை எடுக்க முடியவில்லை. அதே கோவத்தில் ஒரே உறையில் இரண்டு கத்தியாக மற்றொரு தலைமை நிர்வாகி போல் கவர்னர் செயல்படுகிறார்" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×