என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
தேர்தல் பிரசாரத்திற்கு அரசு ஹெலிகாப்டர் - பிரதமர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்
- ஆந்திராவில் உள்ள சிலக்கலூரிப்பேட்டையில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்
- தேர்தல் பிரசாரத்திற்கு செல்வதற்காக இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டரை பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தியுள்ளார்
தேர்தல் பிரசாரத்திற்கு செல்வதற்காக இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டரை பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறி விட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி சாகேட் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், "ஆந்திராவில் உள்ள சிலக்கலூரிப்பேட்டையில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதற்காக அவர் விமான படை ஹெலிகாப்டரை பயன்படுத்தினார்.
தேர்தல் பரப்புரைக்காக செல்லும் போது அரசு ஹெலிகாப்டர், விமானத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி உள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில்,
"தேர்தல் விதிமீறலை காரணம் காட்டி இதே காரணத்திற்காக தான் 1975-ம் ஆண்டு இந்திரா காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அரசு விமானத்தை ஒருவேளை பாஜக வாடகை எடுத்திருக்கலாம். ஆனால் மற்ற தலைவர்கள் அனைவரும் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்த விவிஐபி ஹெலிகாப்டரை பயன்படுத்தும் போது பிரதமர் மட்டும் விமான படையின் ஹெலிகாப்டரை பயன்படுத்துவதற்கான தேவை என்ன என்பதை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தேர்தல் தேதியை அறிவித்த போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆகவே தற்போது பிரதமர் மீது விசாரணையோ, நடவடிக்கையோ எடுக்கிறதா என்பதை பார்க்கலாம்' என்று அவர் தெரிவித்துள்ளார்.