என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வரைவு விதிமுறையை வெளியிட்டது மத்திய அரசு
- ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் பந்தயம் போன்றவற்றில் ஈடுபடக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
- வரைவு விதிமுறைகள் பற்றி பொதுமக்கள் மற்றும் உரிய அமைப்பினர் வரும் ஜனவரி 17ம் தேதிக்குள் கருத்துக்களை வழங்கலாம்.
புதுடெல்லி:
ஆன்லைன் விளையாட்டுகள் மீதான மோகமும் அதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமான ஆன்லைன் தொடர்பான குற்றங்களும் பிரச்சனைகளும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் இவற்றை முறைப்படுத்த வேண்டும், இவற்றிற்காக விதிகளை வகுக்க வேண்டும் என்ற தேவை நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே இருந்தது.
இந்நிலையில் மத்திய அரசு இவற்றை ஒழுங்குமுறைப் படுத்துவதற்கான ஒரு வரைவு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுக்கள் சுயஒழுங்குமுறை அமைப்பிடம் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என தெரிவித்துள்ளது.
இந்த சுயஒழுங்குமுறை அமைப்பானது இந்த ஆன்லைன் விளையாட்டுகளுக்கு பொறுப்பு ஏற்க கூடிய ஒரு அமைப்பாக இருக்கும். ஏதேனும் குறைகள் ஏற்பட்டாலும் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் இந்த அமைப்பு உரிய வழிமுறைகளை கொண்டு இதை தீர்க்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் பந்தயம் போன்றவற்றில் ஈடுபடக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல அதில் விளையாடுபவர்களின் விவரங்களை சரிபார்ப்பது, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் முகவரியை பதிவு செய்வது போன்ற பல்வேறு விஷயங்கள் இந்த வரைவு அறிக்கையின்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது வரைவு விதிமுறைகள் மீது, பொதுமக்கள் மற்றும் உரிய அமைப்பினர் வரும் ஜனவரி 17ம் தேதிக்குள் கருத்துக்களை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கருத்துகளுக்கு பின்னர் வரும் பிப்ரிவரி மாத இறுதிக்குள்ளாக இந்த விதிகள் உறுதி செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.