என் மலர்
இந்தியா
X
ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1.75 லட்சம் கோடி
Byமாலை மலர்1 Sept 2024 8:31 PM IST (Updated: 1 Sept 2024 8:39 PM IST)
- ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1.75 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகி உள்ளது.
- இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை விட 10 சதவீதம் அதிகம் என தெரிவித்தது.
புதுடெல்லி:
ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் 10 சதவீதம் அதிகரித்து ரூ.1.75 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஆகஸ்ட் மாதம் வசூலான ஜி எஸ் டி வரி வசூல் 1.75 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதில் சிஜிஎஸ்டி ரூ.30,900 கோடி ஆகும். எஸ்ஜிஎஸ்டி ரூ.38,400 கோடி ஆகும்.
ஐஜிஎஸ்டி ரூ.93,600 கோடி ஆகும். செஸ் வரி ரூ.12,100 கோடி வசூல் ஆகி உள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1.59 லட்சம் கோடி ரூபாய் வசூல் ஆன நிலையில், இந்த ஆண்டு 10 சதவீதம் கூடுதலாக வசூல் ஆகி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
X