என் மலர்
இந்தியா
மகாராஷ்டிராவில் ஒரு கிராமத்தையே விலைக்கு வாங்கிய குஜராத் மாநில ஜி.எஸ்.டி. கமிஷனர்
- அகமதாபாத் நகரில் ஜி.எஸ்.டி. தலைமை ஆணையராக சந்திரகாந்த் வல்வி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
- இந்த கிராமம் வனப்பகுதியில் அமைந்துள்ளதால், இனிமேல் அந்த மரங்கள் வெட்டப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் ஜி.எஸ்.டி. தலைமை ஆணையராக சந்திரகாந்த் வல்வி என்பவர் பணிபுரிந்து வருகிறார். அவர் மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில் உள்ள கண்டடி பள்ளத்தாக்கில் 620 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஜடானி என்ற கிராமத்தையே விலைக்கு வாங்கியுள்ளார்.
இந்த கிராமம் வனப்பகுதியில் அமைந்துள்ளதால், இனிமேல் அந்த மரங்கள் வெட்டப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று சூழலியல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக பல சட்டவிரோத கட்டிடங்கள் கட்டுப்பட்டு வருவதாகவும், அதனை அரசு அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்றும் சொல்லப்படுகிறது.
ஜடானி கிராமத்தில் உள்ள மக்களிடம் இங்குள்ள வீடுகளை அரசு விரைவில் கையகப்படுத்தும் என்று அந்த கிராமத்தை வாங்கியுள்ள ஜி.எஸ்.டி. தலைமை ஆணையர் கூறியதாக சமூக ஆர்வலர் சுஷாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.